புதன், 5 டிசம்பர், 2012

Nanjil Sambath Joined in ADMK : நாஞ்சில் சம்பத் கொள்கை பரப்பு துணை செயலர்!


      ம. தி. மு. க., வின் பிரசார பீரங்கியாக இருந்து வந்த பிரபல நாஞ்சில் சம்பத் இன்று காலையில் முதல்வர் ஜெ.,வை சந்தித்து அ. தி. மு. க.,வில் தன்னை இணைத்து கொண்டார். இவர் தி. மு. க., பக்கம் சாய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அ. தி. மு. க.,வில் இன்று சேர்ந்தார். இந்த செய்தி ம. தி. மு. க., தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

     ம. தி. மு. க., வில் வைகோவுக்கு இணையாக பெரும் திரளாக நாஞ்சில் சம்பத் பேச்சை கேட்க கூட்டம் சேரும். கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வந்தார். 


     கடந்த சில நாட்களாக கட்சி பொதுச்செயலர் வைகோவுடன் மனக்கசப்பில் இருந்து வந்த சம்பத் கட்சிப்பணியில் இருந்து விலகி இருந்தார். பிரசாரத்திற்கு எங்குமே செல்லவில்லை.

     இந்நிலையில் இவர் அ. தி. மு. க., பொதுசெயலரை நேரில் சந்தித்து தன்னை அ. தி. மு. க., வில் இணைத்து கொண்டார். இவரது விலகல் ம. தி. மு. க., வுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.


     இன்று காலையில் அ. தி. மு. க., வில் இணைந்ததும் சம்பத்துக்கு இந்த கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநில அரசின் சாதனை விளக்க கூட்டங்களில் பங்கேற்க நாஞ்சில் சம்பத் தனது பிரசார பயணத்தை விரைவில் துவங்குவார் என அ. தி. மு. க., கட்சியினர் பேசுகின்றனர்.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக