செவ்வாய், 4 டிசம்பர், 2012

THIRUMANTIRAM - 71 சிவபெருமான் செய்த உபதேச இயல்பு.


71.                        மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்   
                             ஒழிந்த பெருமை யிறப்பும் பிறப்பும்  
                             செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்    
                             கழிந்த பெருமையைக் காட்டகி லானே.

     சிவபெருமான் சிவயோக முனிவர், பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாத முனிவர் ஆகிய மூவர்க்கும் சனகர் முதலிய நால்வர்க்கும் உபதேசம் செய்தார். அது இறப்பையும் பிறப்பையும் நீங்கும்படி செய்யும் பெருமை பொருந்திய நெறியாகும்.  செழுமையான திங்கள் கதிரவன் அக்கினி வடிவான சிவபெருமான் குறைந்த பெருமையை அளிப்பவன் அல்லன்.



     விளக்கம் :  மூவர் - சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிரபாதர். நால்வர் - சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர். செழுஞ்சுடர் - செழுமையுடைய திங்கள், சூரியன், தீ. இம்மூன்றின் வடிவானவன் சிவபெருமான். கழிந்த பெருமை - குறைவான பெருமை. காட்டகிலானே - காட்டமாட்டான்.

     சனகர் முதிலியவர்க்குச் சிவபெருமான் அருளியது துறவு நெறி. சிவயோக முனி முதலியவ்ர்க்கு அப்பெருமான் அருளியது உலகில் இருந்து உலகத்தார்க்கு அருளும் நெறி. இரண்டினது நோக்கமும் பிறவிக் கடல் நீந்துதலேயாம். இவ்விரண்டையும் திருமூலர் நெறி பிணைப்பதாய்க் கொள்ளல் வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக