செவ்வாய், 4 டிசம்பர், 2012

THIRUMANTIRAM - 70 நால்வர் உபதேசம் செய்தல்!


70.                        நால்வரும் நாலு திசைகொன்று நாதர்கள்  
                             நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு 
                             நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென  
                             நால்வரும் தேவராய் நாதரா னார்களே.

     சனகன் முதலிய நால்வரும் நான்கு திக்குகளுக்கு ஒருவராய், அந்நால்வரும் தாம் பெற்ற பல்வேறு வகையான அனுபவங்களைக் கொண்டு, தாம் பெற்ற அனுபவங்களை மற்றவருக்கு எடுத்துரைத்து, அந்நால்வரும் மேன்மை கொண்டவராய்க் குருநாதராக ஆயினார்கள்.



     விளக்கம் :  நால்வர் - சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் அவர்கள் நால்வரும் தாம் பெற்ற உபதேசத்தைப் பிறருக்கு எடுத்துரைத்து வந்தனர்.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக