செவ்வாய், 11 டிசம்பர், 2012

You Want Beautiful Face : மேக்கப் போடாமலேயே அழகு முகம்!


     பெண்கள் மேக்கப் போட்டால்தான் அழகாக இருக்க முடியும் என்பதில்லை. மேக்கப் எதுவும் போடாமலேயே அழகாகத் தோன்ற முடியும். அந்த காலத்து தமிழ் பெண்கள் முகத்தை கடலை மாவு போட்டு கழுவி, மஞ்சள் பூசி குங்குமம் வைத்து அழகாக இருப்பார்கள்.

     தற்போதுள்ள பெண்கள் பவுன்டேஷன், கிரீம், பவுடர், லிப்ஸ்டிக், மஸ்காரா, ஸ்டிக்கர் பொட்டு என்று எத்தனை பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். அடேங்கப்பா! அப்பா மற்றும் கணவன்மார்களின் காசெல்லாம் மேக்கப் பொருட்கள் வாங்கியே காலியாகிவிடும் போல. அப்பா, கணவர் காசை மிச்சப்படுத்தி இயற்கையாகவே எப்படி அழகாகத் தோன்றலாம் என்பதைப் பார்ப்போம்.




     இரவு நேரத்தில் நிம்மதியாக தூங்குங்கள். ஒழுங்காகத் தூங்கினாலே முகம் தெளிவாக இருக்கும். இல்லையென்றால் நீஙகள் என்னதான் மேக்கப் போட்டாலும் முகம் சோர்வாகவே காணப்படும். ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தடவை முகத்தை குளி்ர்ந்த நீரால் கழுவுங்கள். வெளியே சென்றுவிட்டு வந்தால் முகத்தை கழுவுங்கள்.

     கண்டதை முகத்திற்குப் போடாமல் கடலை மாவை பேஸ்ட் போன்று செய்து முகத்தில் தடவி காய வைத்து கழுவிப் பாருங்கள் முகம் ஜொலிக்கும். வீட்டில் இருக்கும் தேனை எடுத்து அதில் சிறிதளவு உப்பு கலந்து முகத்தில் தடவி ஊறவைத்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர முகம் புதுப்பொலிவு பெறும். வீட்டில் ஆலிவ் எண்ணெய் இருக்கிறதா வாரத்தில் 2 முறையாவது முகம் மற்றும் உடலில் தடவி ஊற வைத்து குளியுங்கள். அது தோலுக்கு நல்லது.




     உங்களுக்கு பாலாடை உண்ண பிடிக்காதா, சாப்பிடாதீர்கள். அதை எடுத்து கீழே போடாமல் முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்து வந்தீர்கள் என்றால் உங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் அழகுக் குறிப்பு கேட்பார்கள்.

     இதையெல்லாம் விட எளிய வழி நிறைய தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் குடிப்பதால் தோல் அவ்வளவு சீக்கிரம் சுருங்காது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி இயற்கையாகவே கிடைக்கும் அழகு சாதனப் பொருட்கள் இருக்க கண்டதை போட்டு முகத்தை கெடுத்துக் கொள்வானேன்.



Thanks to : eelamboys
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக