செவ்வாய், 4 டிசம்பர், 2012

THIRUMANTIRAM - 69 திருமூலரின் மாணவர் எழுவர்!


69.                        மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்  
                             இந்திரன் சோமன் பிரம னுருத்திரன் 
                             கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு    
                             இந்த எழுவரு மென்வழி யாமே.

     திருமந்திர உபதேசத்தையும் பெற்ற வழிமுறையாவது மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கட்டுத்தறியைப் போல் அசையாதிருக்கும் காலாங்கி, கஞ்சமலையன் ஆகிய இந்த எழுவரும் என்வழி தோன்றிய மாணாக்கர் ஆவர்.



     விளக்கம் :  திருமூலரின் மாணவர்கள் : 1. மாலாங்கன், 2. இந்திரன், 3. சோமன், 4. பிரமன், 5. உருத்திரன், 6. காலாங்கி, 7. கஞ்சமலையன். கந்துரு - கட்டுத்தறி.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக