செவ்வாய், 4 டிசம்பர், 2012

THIRUMANTIRAM - 72 கடன்களைச் செய்ய உபதேசித்தல்.


72.                        எழுந்துநீர் பெய்யினும்எட்டுத் திசையும்   
                             செழுந்தண் நியமங்கள் செய்யுமினென் றண்ணல்   
                             கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே   
                             அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.

     எட்டுத் திக்குகளிலும் எழுந்து பெரிய மழை பெய்தாலும் வளர்ச்சியைத் தரும் கடன்களைத் தடையின்றிச் செய்யுங்கள் என்று சிவபெருமானின் கொழுவிய குளிர்ந்த பவளம் போன்ற குளிர்ந்த சடையிடம் அன்பு கொண்ட சனகர் முதலிய நால்வர்க்கும் அருள் உபதேசத்தைச் செய்தான். 



     விளக்கம் :  பவளக் குளிர் சடையோடே அழுந்துதல் - யோகியர் தலையில் விளங்கும் செவ்வொளியில் அழுந்தியிருத்தல்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக