புதன், 22 மே, 2013

THIRUMANTIRAM - 78 : இறைவியின் திருவடியைத் சேர்ந்திருந்தேன்.


78.                        நேரிழை ஆவாள் நிரதிச யானந்தப்       
                             பேருடை யாள்; என் பிறப்பு அறுத்து ஆண்டவள்; 
                             சீருடையாள்; சிவன் ஆவடு தண்துறைச் 
                             சீருடை யாள்பதம் செர்ந்திருந் தேனே. 

     சிறந்த அணிகளை அணிந்த சக்தி உயர்வான சிவானந்தவல்லி என்னும் திருப்பெயரை உடையவள் என் பிறப்பைப் போக்கி ஆட்கொண்டாள். அவள் எல்லையற்ற சிறப்பை உடையாள். சிவபெருமான் சீவர்களைப் பக்குவம் செய்வதற்காக எழுந்தருளியுள்ள வீணாத்தண்டில் பொருந்தியிருப்பாள். அத்தகையவளின் திருவடியைச் சேர்ந்து இருந்தேன்.   

     விளக்கம் : சேர்ந்திருத்தல் - இடைவிடாது நினைந்திருத்தல். ஆவது தண்டுறை - ஆ + அடு + தண்டு + உறை - உயிர்களைப் பக்குவம் செய்யும் தொழிலான வீணாத்தண்டில் பொருந்தி. திருமூலர் சுழுமுனையில் உள்ள சிற்சத்தியுடன் பொருந்தியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக