புதன், 15 மே, 2013

THIRUMANTIRAM - 76 ஆராய்ச்சியால் உண்மையை உணர்ந்தேன்!


76.                        சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்       
                             மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்    
                             இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி  
                             உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால். 

     சாதாக்கியத் தத்துவத்தையும் முத்தமிழ் மொழியையும் வேதத்தையும் பெரிதும் நுகர்ந்திருந்தேன். அங்ஙனம் அவற்றை அனுபவித்த காலத்தில் நன்மையைத் தரும் உணவையும் உண்ணாமல் இருந்தேன். அதனால் மனம் தெளிந்து பாராமுகமாய் இருந்ததால் உண்மைப் பொருளை உணர்ந்தேன். 

     விளக்கம் :  மிதாசனியாதிருந்தேன் - உணவை அளவுடன் உண்ணாமல் இருந்தேன். மிதம் - அசனம் = மிதம் - அளவு. அசனம் - உணவு; மிதமான உணவு. எனவே மிதாசனியாது இருந்தேன் என்பது பெரிதும் நுகர்ந்திருந்தேன் என்று பொருள் கொள்ள வேண்டும். இதாசனியாமை - இதமான உணவு இல்லாமை. உதாசனியாமை - விருப்பு வெறுப்பு இல்லாமை. 'சதாசிவம், தத்துவம், முத்தமிழ் வேதம் என்னும் மூன்றையும் அளவுக்கு மேல் ஆராய்ந்து கண்டேன்' என்பது கருத்து. இத்தகைய ஆராய்ச்சியில் திருமூலர் ஈடுபட்டிருந்ததால் உண்மைப் பொருளைக் கண்டார் என்க.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக