1. வசந்த ருது, 2. கிரீஷ்ம ருது, 3. வருஷ ருது, 4. சரத் ருது, 5. ஹேமந்த ருது, 6. சிசிர ருது.
சித்திரை மாதமும், வைகாசி மாதமும் - வசந்த ருது.
ஆனி மாதமும், ஆடி மாதமும் - கிரீஷ்ம ருது.
ஆவணி மாதமும், புரட்டாசி மாதமும் - வருஷ ருது.
ஐப்பசி மாதமும், கார்த்திகை மாதமும் - சரத் ருது.
மார்கழி மாதமும், தை மாதமும் - ஹேமந்த ருது.
மாசி மாதமும், பங்குனி மாதமும் - சிசிர ருது.

வசந்த ருது :
வசந்த ருதுவின் அபிமான தேவதை காமதேவன்.
வசந்த ருதுவில் பிறந்தவர்களுடைய பலன் :
மன்மதனைப் போல் அழகானவன், சிறந்த அறிவுடையவன், வெற்றி பெறுபவன், புகழ் பெறுபவன், சங்கீதம் மற்றும் கணிதத்தில் தேர்ச்சி மிக்கவன், சாஸ்திரம் மற்றும் அஸ்த்ர வித்தைகளை அறிந்தவன்.
கிரீஷ்ம ருதுவின் அபிமான தேவதை அக்னி.
கிரீஷ்ம ருதுவில் பிறந்தவர்களுடைய பலன் :
செல்வம் மிகுந்தவன், தானியக் குவியல் மிக்கவன், சிறந்த பேச்சாளன், நீண்ட குழற்கற்றைகளையுடையவன், சுக போகங்களைத் துய்ப்பவன்.
வருஷ ருதுவின் அபிமான தேவதை வருணன்.
வருஷ ருதுவில் பிறந்தவர்களுடைய பலன் :
போரில் வல்லவன், சிறந்த அறிவாளி, குதிரைகளிடம் அன்பு கொண்டவன், அழகன், கபம் மற்றும் வாயுத் தொல்லைகளால் வருந்துபவன், மகிழ்ச்சியுடன் வாழ்பவன்.
சரத் ருதுவின் அபிமான தேவதை பார்வதி.
சரத் ருதுவில் பிறந்தவர்களுடைய பலன் :
செல்வந்தன், தருமவான், தூய்மையானவன், போரில் விருப்பமுள்ளவன், வாகனங்களையுடையவன், மானமுடையவன், வாயுத் தொல்லையால் துன்பப்படுபவன் மற்றும் ரோஷமுடன் கூடியவன்.
ஹேமந்த ருதுவின் அபிமான தேவதை ஆதிசேஷன்.
ஹேமந்த ருதுவில் பிறந்தவர்களுடைய பலன் :
அமைச்சனாகவும், சாமார்த்தியம் மிக்கவனாகவும், நற்குணங்களுடன் கூடியவனாகவும், நற்ச்செயல்களையும் தரும காரியங்களைச் செய்வதில் விருப்பமுள்ளவனாகவும், பணிவுடன் கூடியவனாகவும் இருப்பவன்.
சிசிர ருது :
சிசிர ருதுவின் அபிமான தேவதை ஈஸ்வரன்.
சிசிர ருதுவில் பிறந்தவர்களுடைய பலன் :
சிறந்த உணவு வகைகளையும், பானங்களையும் அருந்துபவன், குருவிடம் அன்பு கொண்டவன், பணிவு உள்ளவன், மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு விருப்பமானதைச் செய்பவன், தூயமனம் கொண்டவன், ரோஷம் மற்றும் பலம் முதலியவற்றுடன் கூடியவன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக