முக்கனிகள் பட்டியலில் இடம் பிடித்த கனி பலாப்பழம். பார்க்க முட்தோலுடன் கரடு முரடாக இருந்தாலும், தித்திக்கும் சுளைகளுடன், மயக்கும் மணத்துடன், சாப்பிடுபவர்களுக்கு பலன் தரும் கனி. மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரியது என்ற பெயர் பெற்றது. தமிழகம், கேரளாவில் அதிகமான அளவு விளைகின்றது.
* பலாப்பழத்தில் அதிகப்படியான புரதம் மற்றும் மாவுச் சத்துக்கள் உள்ளது.
* நரம்புகளை உறுதியாக்கும். மூளையில் உள்ள செல்களை பாதுகாக்கிறது.
* சரும நோய்களைத் தடுக்கும். சருமத்தை வெண்மையாகவும், வழவழப்பாகவும் வைத்திருக்கவும் உதவுகின்றது.
* ரத்த ஓட்டத்தை சீராக்கி, சிவப்பு அணுக்கள் உற்பத்தியை பெருக்க உதவுகிறது.
* ரத்தத்தில் நோய் தொற்று கிருமிகள் வளர்வதை தடுக்கப் போராடும் குணம் பலாப் பழத்துக்கு இருக்கிறது.
* நெய் அல்லது தேன் கலந்த பலாப்பழத்தை உண்பதால் இதயம், மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
* விட்டமின் பி சத்துக்கள் அதிகம் உள்ளதால் எளிதில் ஜீரணமாகும். குடலுக்கு வலிமை தரும்.
* கண் பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிகமாக உள்ளது.
* தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இதை சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால், குழந்தைகளுக்கு மந்த நோய் ஏற்படும்.
* பால் கொடுக்கும் தாய்மார்கள் பலாக் காயை சமைத்து சாப்பிட்டால் பால் அதிகமாக சுரக்கும்.
* மூலம் மற்றும் வாத நோய் உள்ளவர்களுக்கு பலாப்பழம் ஆகாது.
* உடலில் உள்ள தசைகளை சீராக இயங்க வைக்கும் ஆற்றல் பலாப்பழத்திற்கு உண்டு.
* பலாப்பழ கீர் இரவில் அருந்தினால் நன்றாக உறக்கம் வரும்.
* பல் உறதி பெற, ஈறு கெட்டியாக, பலாப்பழம் சாப்பிட்டு வரலாம்.
* அதிக பலாப்பழம் சாப்பிட்டால் குடல்வால் அழற்ஜி ஏற்படும் வாய்ப்பு உண்டு.
* பலாப்பழம் பித்தத்தை ஊக்கப்படுத்தும். எனவே, இதைச் சாப்பிட்ட பின்னர், சிறிது நெய் அல்லது பால் அருந்தினால் எந்தத் தொல்லைகளும் ஏற்படாது.
* பலாப்பழத்துடன் நாட்டுச் சர்க்கரையை கலந்து சாப்பிட உடல் புத்துணர்ச்சி பெரும். சில கோயில்களில் பலாப்பழத்தை நாட்டு சர்க்கரையுடன் கலந்து பிரசாதமாகக் கொடுக்கும் ரகசியம் இதுதான்.
* சர்க்கரை அல்லது நீரிழிவு நோய் உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிடக்கூடாது.
100 கிராம் பலாப்பழத்தில் உள்ள சத்துக்கள் இவை :
சக்தி 397 ஜூல்கள், கார்போஹைட்ரேட் 23.25 கிராம்,
நார்ச்சத்து 1.5 கிராம், கொழுப்பு 0.64 கிராம்,
புரோட்டின் 1.75 கிராம், விட்டமின் A5 யூனிட்கள்,
பீட்டா கரோட்டின் 61 யூனிட்கள், லூடின், ஷாக்தானின் 157 யூனிட்கள்
விட்டமின் B1-0.105 மி.கிராம், விட்டமின் B2-0.055 மி.கிராம்,
விட்டமின் B3-0.92 மி.கிராம், விட்டமின் B5-0.235 மி.கிராம்,
விட்டமின் B6-0629 மி.கிராம், விட்டமின் B9-24 யூனிட்கள்,
விட்டமின் C-13.7 மி.கிராம், விட்டமின் E-0.34 மி.கிராம்,
கால்சியம் 24 மி.கிராம், இரும்பு 0.23 மி.கிராம்,
மெக்னிசியம் 29 மி.கிராம், மாங்கனீசு 0.043 மி.கிராம்,
பாஸ்பரஸ் 21 மி.கிராம், பொட்டாசியம் 448 மி.கிராம்,
சோடியம் 2 மி.கிராம், துத்தநாகம் 0.13 மி.கிராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக