சனி, 9 ஜூன், 2012

சிவபெருமானைப் போன்ற தெய்வம் இல்லை!

5.                          சிவனோடக் குந்தெய்வம் தேடினும் இல்லை;
                             அவனோடோப் பார் இங்கு யாவரும் இல்லை;
                             புவனங் கடந்தன்று பொன்ஒளி மின்னும்
                             தவனைச் சடைமுடித் தாமரை யானே!

     சிவபெருமானைவிடச் சிறப்பான தெய்வம் உலகில் எங்குத் தேடினும் இல்லை. இனி அப்பெருமானுக்கு உவமையாய்க் கூறத் தக்கவர் எவரும் இல்லை. அப்பெரு மான் அண்டத்தைக் கடந்து நின்று பொன் போல் ஒளிர்ந்து விளங்குபவன். செந்நிற மான மேல்நோக்கிய சகசிரதளத் தாமரையில் விளங்குபவன்.

     விளக்கம் :  தாமரை - தா + மறை; தாவும் மான் எனவும் பொருள்படும். கடந்த அன்று - வேறாய் நின்று படைத்தலும் அழித்தலும் செய்த காலத்து. புவனம் - உடல்; உலகம். தவனம் - அக்கினி; செந்நிறம். தனக்கு ஓர் உவமை இல்லாத சிவபெருமான் சகசிரதளத்தில் விளங்குபவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக