9. பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னால் பிறங்க இருந்தவன்; பேர் நந்தி;
என்னால் தொழப்படும் எம்இறை; மற்று அவன்
தன்னால் தொழப்படு வார்இல்லை தானே.
பின்னால் பிறங்க இருந்தவன்; பேர் நந்தி;
என்னால் தொழப்படும் எம்இறை; மற்று அவன்
தன்னால் தொழப்படு வார்இல்லை தானே.
இறைவன் பொன்னால் இயற்றப்பட்டார் போன்ற அழகிய சடை எனச் சொல்லும்படி பின்புறம் விளங்க விளங்குபவன். அவனது திருநாமம் நந்தி என்பதாகும். என்னால் அவன் வணங்கத் தக்கவன். உயிர்கட்கு எல்லாம் தலைவன். ஆயினும் அவனால் வணங்கத் தக்கவர் எவரும் இலர்.
விளக்கம் : புரிந்திட்ட - முறுக்கப்பட்ட; இயற்றப்பட்ட. பொன்சடை - பொன் போன்ற நிறம் பொருந்திய சடை. பின்னால் - பிற்பக்கத்தில். நந்தி - இறைவனின் திருப்பெயர். சிவபெருமானுக்கு மேற்பட்ட தெய்வம் இல்லை. ஆதலால் தன்னால் 'தொழப்படுவார் இல்லை' என்றார். சிவபெருமான் மற்றத் தேவர்க்கு மேலானவன் என்பது கருத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக