படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்றயன் பொய்மொழிந் தானே.
'சிவபெருமானின் திருவடியையும் திருமுடியையும் காண்போம்' என்று நினைத்து, அதற்கு முயன்ற நான்முகனும், திருமாலும் ஆகிய இருவரும் இறைவனின் அடிமுடி காணாமல் மீளவும் பூமியில் கூடினர். 'நான் அடி காண்கிலேன்', என்று திருமால் உரைத்தார். 'நான் முடிகண்டேன்', என்று நான்முகன் பொய் சொன்னான்.
விளக்கம் : அயன் - நான்முகன். மால் - திருமால். படி - உருவம். அச்சுதன் - திருமால்.
விளக்கம் : அயன் - நான்முகன். மால் - திருமால். படி - உருவம். அச்சுதன் - திருமால்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக