வியாழன், 3 அக்டோபர், 2013

ASTROLOGY - 47 : பஞ்சாங்கம்.


6. சோதிடவியலில் திதி சுக்கில ஷஷ்டியின் தன்மை :

    ஷஷ்டி திதி தேவதையின் நிறம்             : சிவப்பு 
    ஷஷ்டி திதி தேவதையின் கைகள்          : கோழியுடன் கூடியது   
    ஷஷ்டி திதி தேவதையின் வாகனம்       : மயில்    
    ஷஷ்டி திதி தேவதையின் ஆயுதம்        : பாத்திரம்     
    ஷஷ்டி திதியின் அபிமான தேவதை      : முருகன்  
    ஷஷ்டி திதியின் விஷநாடி (சாராவளிப்படி) : 20 நாழிகைகளுக்கு மேல் 
                                                                                 4 நாழிகைகள்.

    ஷஷ்டி திதியில் பிறந்தவர்களின் குணம் : பிறரால் வெல்ல முடியாதவன், உடல் வலிமையும், மனோ வலிமையும் மிக்கவன், புகழ் பெற்றவன், எளிதில் கோபம் கொள்பவன், மக்களுக்குத் தலைவன், முகம், தலை, உடலின் பின் பகுதியில் மச்சமுள்ளவன். 

    ஷஷ்டி திதியில் செய்யத்தக்கவைகள் : பிறரிடம் சேவகம் செய்தல், ஆபரணங்கள் செய்தல், பசுமாடு வாங்குதல், மனை வாங்குதல், விற்றல், மருந்து தயாரித்தல். 


7. சோதிடவியலில் திதி சுக்கில ஸப்தமியின் தன்மை :

    ஸப்தமி திதி தேவதையின் நிறம்             : மேக நிறம்  
    ஸப்தமி திதி தேவதையின் கைகள்          : புரசமரத்தாலான பாத்திரத்துடன்                                                                                         கூடிய கைகள்.    
    ஸப்தமி திதி தேவதையின் வாகனம்       : அன்னம்    
    ஸப்தமி திதியின் அபிமான தேவதை      : இரவி   
    ஸப்தமி திதியின் விஷநாடி (சாராவளிப்படி) : 22 நாழிகைகளுக்கு மேல் 
                                                                                  4 நாழிகைகள்.

    ஸப்தமி திதியில் பிறந்தவர்களின் குணம் : சிறந்த அறிவாளி, நற்குணம் மிக்கவன், பெரிய செல்வந்தன், கருத்தமேனி கொண்டவன், கலைகளில் சிறந்தவன், தலைவன் மற்றும் ஆக்கல், காத்தல், அழித்தலில் திறமை உள்ளவன். 

    ஸப்தமி திதியில் செய்யத்தக்கவைகள் : மனை கட்டுதல், உபநயனம், திருமணம், தேவதைகளை பிரதிஷ்டை செய்தல், பயிரிடுதல், அணிகலன்கள் செய்தல் மற்றும் போரிடுதல். 



8. சோதிடவியலில் திதி சுக்கில அஷ்டமியின் தன்மை :

    அஷ்டமி திதி தேவதையின் நிறம்             : பால் போல் வெண்மை  
    அஷ்டமி திதி தேவதையின் கைகள்          : மணியுடன் கூடியது. 
    அஷ்டமி திதி தேவதையின் ஆயுதம்         : பாத்திரம்
    அஷ்டமி திதி தேவதையின் இருப்பிடம்   : மாட்டுக்கொட்டில்     
    அஷ்டமி திதியின் அபிமான தேவதை      : பரமேஸ்வரன்  
    அஷ்டமி திதியின் விஷநாடி (சாராவளிப்படி) : 24 நாழிகைகளுக்கு மேல் 
                                                                                    4 நாழிகைகள்.

    அஷ்டமி திதியில் பிறந்தவர்களின் குணம் : பிறருக்கு தீங்கிழைப்பதில் மகிழ்ச்சியுடையவன், நீசத்தனமான தொழில் புரிபவன், கபம் மிகுந்தவன், மனைவியுடன் கூடியவன், காமம் மிக்கவனுமாவான்.

    அஷ்டமி திதியில் செய்யத்தகாதவைகள் : போரிடுதல், தானியம் பயிரிடுதல் வாஸ்து காரியங்கள், சிற்ப வேலைகள், கோபத்தால் செய்யக் கூடியவைகள், எழுத்து வேலை, பெண்கள் சம்பந்தப்பட்ட செயல்கள், ரத்தினங்கள், ஆபரணங்கள் செய்தல்.



9. சோதிடவியலில் திதி சுக்கில நவமியின் தன்மை :

    நவமி திதி தேவதையின் நிறம்             : வெண்மை  
    நவமி திதி தேவதையின் ஆயுதம்        : பாசம், பாத்திரம்
    நவமி திதி தேவதையின் வாகனம்       : சிங்கம்      
    நவமி திதியின் அபிமான தேவதை      : வசுக்கள்   
    நவமி திதியின் விஷநாடி (சாராவளிப்படி) : 22 நாழிகைகளுக்கு மேல் 
                                                                              4 நாழிகைகள்.

    நவமி திதியில் பிறந்தவர்களின் குணம் : நாத்திகன், பயமற்றவன், புகழ் பெற்றவன், வஞ்ச நெஞ்சம் கொண்டவன், சூரன், பண்டிதன், தனக்கடங்காத பிள்ளையுடையவன், பிறரை தன் வயப்படுத்துபவன்.

    நவமி திதியில் செய்யத்தக்கவைகள் : போரிடுதல், பகைவனை சிறையெடுத்தல், அழித்தல், நண்பர்களுள் கருத்து வேறுபாடு உண்டு பண்ணுதல் முதலியன.



10. சோதிடவியலில் திதி சுக்கில தசமியின் தன்மை :

    தசமி திதி தேவதையின் நிறம்             : கருமை   
    தசமி திதி தேவதையின் ஆயுதம்        : தடி 
    தசமி திதி தேவதையின் வாகனம்       : காட்டெருமை   
    தசமி திதியின் அபிமான தேவதை      : நாகம்    
    தசமி திதியின் விஷநாடி (சாராவளிப்படி) : 24 நாழிகைகளுக்கு மேல் 
                                                                             4 நாழிகைகள்.

    தசமி திதியில் பிறந்தவர்களின் குணம் : தருமவான், செல்வந்தன், எல்லாச்செல்வங்களும் நிறைந்தவன், மனைவி மக்கள், நண்பர்களுடன் கூடியவன், நீதிமான், அறிவாளி, உண்மையே பேசுபவன்.

    தசமி திதியில் செய்யத்தக்கவைகள் : உடலின் வலிமைக்கான செயல்கள், மங்களகரமான செயல்கள், பிரயாணம், மனை புகுதல், குறிப்பிட்ட நபரைக் காணல், நீர் சம்பந்தமான செயல்கள்.



11. சோதிடவியலில் திதி சுக்கில ஏகாதசியின் தன்மை :

    ஏகாதசி திதி தேவதையின் நிறம்             : சித்ரவர்ணம் (வர்ணக்கலவை)   
    ஏகாதசி திதி தேவதையின் முகம்            : வெண்மையான முகம்  
    ஏகாதசி திதி தேவதையின் கண்கள்         : சிவந்த கண்கள்
    ஏகாதசி திதி தேவதையின் ஆயுதம்        : தராசு, கத்தரிக்கோல்      
    ஏகாதசி திதி தேவதையின் வாகனம்       : மான்    
    ஏகாதசி திதியின் அபிமான தேவதை      : தருமதேவதை     
    ஏகாதசி திதியின் விஷநாடி (சாராவளிப்படி) : 41 நாழிகைகளுக்கு மேல் 
                                                                                 4 நாழிகைகள்.

    ஏகாதசி திதியில் பிறந்தவர்களின் குணம் : முன்னோர்களிடத்தும், தேவதைகளிடத்தும் பக்தி செலுத்துபவன், எடுத்த செயலை முடிப்பதில் முயற்சியுடையவன், வெற்றி பெறுவதில் நாட்டமுடையவன், செல்வந்தன், அரசனைப் போல் செயல்கள் புரிபவன்.

    ஏகாதசி திதியில் செய்யத்தக்கவைகள் : திருமணம் செய்தல், பயிரிடுதல், வாணிபம் செய்தல், உபவாசம் இருத்தல், அணிகலன்கள் செய்தல், சிற்பவேலைகள் முதலியவை.



12. சோதிடவியலில் திதி சுக்கில துவாதசியின் தன்மை :

    துவாதசி திதி தேவதையின் நிறம்             : மேகநிறம்   
    துவாதசி திதி தேவதையின் ஆயுதம்        : சக்கிரம், பாத்திரம்,      
    துவாதசி திதி தேவதையின் வாகனம்       : கருடன்     
    துவாதசி திதியின் அபிமான தேவதை      : விஷ்ணு      
    துவாதசி திதியின் விஷநாடி (சாராவளிப்படி) : 54 நாழிகைகளுக்கு மேல் 
                                                                                 4 நாழிகைகள்.

    துவாதசி திதியில் பிறந்தவர்களின் குணம் : காமம் மிகுந்தவன், சுற்றத்துடன் கூடியவன், பராக்கிரமசாலி, அழகுடையவன், சாந்தகுணம் உள்ளவன், செல்வந்தன், தைரியசாலி, தியாகி, வீரன், சுகவாசி, கலைகளையறிந்தவன். 

    துவாதசி திதியில் செய்யத்தக்கவைகள் : செல்வத்தைப் பெருக்குதல், தானியங்களைச் சேர்த்தல், செலவழித்தல், தரும காரியங்களைச் செய்தல்.

குறிப்பு : சிரவணம் எனும் திருவோண நட்சத்திரத்துடன் கூடிய துவாதசிக்கு சிரவண துவாதசி என்று பெயர். இந்நாள் உபவாசத்திற்கு மட்டுமே ஏற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக