சனி, 5 அக்டோபர், 2013

THIRUMANTIRAM - 87 : உலகமும் உயிரும் வாழச் செய்வது திருமந்திரம்.


87.                        அங்கி மிகாமை வைத்தான் உடல்; வைத்தான்             
                             எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்;
                             தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச்சாத்திரம் 
                             பொங்கி மிகாமை வைத்தான் பொருள்தானுமே.

     உடலை அளித்த சிவபெருமான் அந்த உடலில் அக்கினியை மிகாமல் இருக்கும்படி வைத்துள்ளான். பூவுலகம் முதலியவற்றையும் அழியாத வண்ணம் தீயை வைத்தான். குழப்பம் இல்லாமல் இருக்கத் தமிழ் ஆகமமான திருமந்திரத்தை வைத்தான். அனைத்துப் பொருள்களும் இதனுள் அடங்கும்படி வைத்துள்ளான்.
   
     விளக்கம் : அங்கி - தீ. உடலில் அங்கி குடரைச் சீர் செய்யும் சாடராக்கினி. உலகத்தில் வைக்கப்பட்ட தீயானது கடலைப் பெருகி எழாதபடி செய்யும் வடவாமுகாக்கினி. உலகம் - உயிர் ஆகியவை வாழும்படி செய்வது திருமந்திரம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக