புதன், 5 பிப்ரவரி, 2014

ASTROLOGY - 48 : பஞ்சாங்கம்.


13. சோதிடவியலில் திதி சுக்கில திரயோதசியின் தன்மை :

    திரயோதசி திதி தேவதையின் நிறம்             : வெண்மை
    திரயோதசி திதி தேவதையின் ஆயுதம்        : வில், அம்பு     
    திரயோதசி திதி தேவதையின் வாகனம்       : மகர மீன்       
    திரயோதசி திதியின் அபிமான தேவதை      : காமன்   
    திரயோதசி திதியின் விஷநாடி                      : 32 நாழிகைகளுக்கு மேல் 
    (சாராவளிப்படி)                                                   4 நாழிகைகள்.

     திரயோதசி திதியில் பிறந்தவர்களின் குணம் : அழகன், அதிகக் காமமுடையவன், வெற்றி கொள்பவன், வித்வான், பேராசைமிக்கவன், செல்வந்தன், சஞ்சலபுத்தியுள்ள மைந்தனையுடையவன், நாட்டியத்தில் ரசனையுள்ளவன், நாற்கால் பிராணிகளாகிய செல்வம் மிக்கவன்.

     திரயோதசி திதியில் செய்யத்தக்கவைகள் : நற்செயல்கள், சௌபாக்கியத்தை தரவல்ல செயல்கள், நாட்டியம் பயிலுதல், அணிகலன்கள் செய்தல், குதிரையேற்றம் பயிலல், கட்டுரை, கதை முதலியன எழுதுதல் முதலியன.



14. சோதிடவியலில் திதி சுக்கில சதுர்த்தசியின் தன்மை :

    சதுர்த்தசி திதி தேவதையின் நிறம்             : வெண்சிவப்பு
    சதுர்த்தசி திதி தேவதையின் கண்கள்         : பட்டுப்பூச்சி போன்ற 
                                                                              சிவந்த கண்கள்  
    சதுர்த்தசி திதி தேவதையின் கழுத்து          : நீலநிறக் கழுத்து
    சதுர்த்தசி திதி தேவதையின் கைகள்          : பழம், பாத்திரத்துடன் கூடியது  
    சதுர்த்தசி திதி தேவதையின் இருப்பிடம்   : தாமரை மலர்     
    சதுர்த்தசி திதியின் அபிமான தேவதை      : கலி   
    சதுர்த்தசி திதியின் விஷநாடி                      : 17 நாழிகைகளுக்கு மேல் 
    (சாராவளிப்படி)                                                   4 நாழிகைகள்.

     சதுர்த்தசி திதியில் பிறந்தவர்களின் குணம் : கோபமுடையவன், மனோவசியமுடையவன், அறிவற்றவன், நாத்திகன், செல்வமுள்ளவன், பிறர்மனை நயப்பவன். 

     சதுர்த்தசி திதியில் செய்யத்தக்கவைகள் : எண்ணை தேய்த்துக் குளித்தல், புலால் உண்ணுதல், பிரயாணம் செய்தல், உபநயனம் மற்றும் எவ்வித சுப காரியங்கள்.



15. சோதிடவியலில் திதி சுக்கில பௌர்ணமியின் தன்மை :

    பௌர்ணமி திதி தேவதையின் நிறம்           : வெண்மை 
    பௌர்ணமி திதி தேவதையின் கைகள்        : இடது கையில் அமுத கலசம்,
                                                                                வலது கையில் அதன் மூடி.
    பௌர்ணமி திதி தேவதையின் ஆபரணம்   : முத்துக்களால் ஆனது. 
    பௌர்ணமி திதி தேவதையின் வாகனம்     : முயல்     
    பௌர்ணமி திதியின் அபிமான தேவதை    : சந்திரன்   
    பௌர்ணமி திதியின் விஷநாடி                    : 14 நாழிகைகளுக்கு மேல் 
    (சாராவளிப்படி)                                                   4 நாழிகைகள்.

     பௌர்ணமி திதியில் பிறந்தவர்களின் குணம் : அழகிய உடலமைப்பு கொண்டவன், தேவர்களாலும், அந்தணர்களாலும் கொண்டாடப்படுபவன், போக பாக்கியங்களை அனுபவிப்பவன்.

     பௌர்ணமி திதியில் செய்யத்தக்கவைகள் : வேள்விச்சடங்குகள், மங்களகரமான செயல்கள், உடல் வலிமை தரும் செயல்கள், போர் புரிதற்கான செயல்கள், மனை சம்பந்தமான செயல்கள், திருமணம் மற்றும் சிற்பக் கலைகள், அணிகலன்கள் செய்தல் முதலியன.



16. சோதிடவியலில் திதி கிருஷ்ண பிரதமையின் தன்மை :

    பிரதமை திதி தேவதையின் நிறம்            : புகை நிறம் 
    பிரதமை திதி தேவதையின் முகங்கள்     : நான்கு
    பிரதமை திதி தேவதையின் கைகள்         : நான்கு   
    பிரதமை திதி தேவதையின் ஆயுதம்       : அம்பு, பாத்திரம், வில், 
                                                                             ஓமக்கரண்டி 
    பிரதமை திதி தேவதையின் வாகனம்      : ஊர்க்குருவி      
    பிரதமை திதியின் அபிமான தேவதை     : அக்கினி    
    பிரதமை திதியின் விஷநாடி                     : 18 நாழிகைகளுக்கு மேல் 
    (சாராவளிப்படி)                                                   4 நாழிகைகள்.

     பிரதமை திதியில் பிறந்தவர்களின் குணம் : செல்வந்தன், புண்ணியச் செயல்களில் ஈடுபாடுள்ளவன்.

     பிரதமை திதியில் செய்யத்தக்கவைகள் : உலோகம், கருங்கல், மரம் இவைகளில் சித்திர வேலைகள், பாய்முடைதல், சித்திரம் வரைதல், போர்க்கருவிகள் செய்தல் முதலியன.



17. சோதிடவியலில் திதி கிருஷ்ண துவிதியையின் தன்மை :

    துவிதியை திதி தேவதையின் நிறம்             : வெண்மை  
    துவிதியை திதி தேவதையின் கைகள்          : கமண்டலத்துடன் கூடியது.   
    துவிதியை திதி தேவதையின் ஆபரணம்     : ஜபமாலை  
    துவிதியை திதி தேவதையின் வாகனம்       : காளை      
    துவிதியை திதியின் அபிமான தேவதை      : துவஷ்டா   
    துவிதியை திதியின் விஷநாடி                      : 14 நாழிகைகளுக்கு மேல் 
    (சாராவளிப்படி)                                                   4 நாழிகைகள்.

     துவிதியை திதியில் பிறந்தவர்களின் குணம் : துக்கமற்றவன், கவிஞன், அழகன், காமம் மிகுந்தவன், கலகம் செய்வதில் ஈடுபாடுள்ளவன், நாற்கால் பிராணிகள், தானியங்கள் மிக்கவன்.

     துவிதியை திதியில் செய்யத்தக்கவைகள் : மிஞ்சிப்புல்லால் செய்யக் கூடிய வேலைகள், திருமணம், யாத்திரை, தேவதைகளை பிரதிஷ்டை செய்தல், ஆபரணங்கள் செய்வது, வீடு கட்டுவது முதலியன.



18. சோதிடவியலில் திதி கிருஷ்ண திருதியையின் தன்மை :

    திருதியை திதி தேவதையின் நிறம்             : நீல நிறம்   
    திருதியை திதி தேவதையின் ஆயுதம்        : சங்கு, பாத்திரம்    
    திருதியை திதி தேவதையின் வாகனம்       : கருடன்      
    திருதியை திதியின் அபிமான தேவதை      : கெளரி   
    திருதியை திதியின் விஷநாடி                      : 13 நாழிகைகளுக்கு மேல் 
    (சாராவளிப்படி)                                                   4 நாழிகைகள்.

      திருதியை திதியில் பிறந்தவர்களின் குணம் : தவத்தில் ஈடுபாடு கொண்டவன், செல்வந்தன், நற்செயல்கள் புரிபவன், அழகன், அறிவாளி.

      திருதியை திதியில் செய்யத்தக்கவைகள் : சங்கீதம், இசைக்கருவிகள் மற்றும் ஓவியம் பயிலுதல், வீடு கட்டுதல், புதுமனை புகுதல் முதலியன.



19. சோதிடவியலில் திதி கிருஷ்ண சதுர்த்தியின் தன்மை :

    சதுர்த்தி திதி தேவதையின் நிறம்             : கருமை
    சதுர்த்தி திதி தேவதையின் கைகள்          : நான்கு      
    சதுர்த்தி திதி தேவதையின் ஆபரணம்     : ஜபமாலை     
    சதுர்த்தி திதி தேவதையின் ஆயுதம்        : பாசம், பாத்திரம்    
    சதுர்த்தி திதி தேவதையின் வாகனம்       : எருமை       
    சதுர்த்தி திதியின் அபிமான தேவதை      : கணபதி    
    சதுர்த்தி திதியின் விஷநாடி                      : 30 நாழிகைகளுக்கு மேல் 
    (சாராவளிப்படி)                                                   4 நாழிகைகள்.

      சதுர்த்தி திதியில் பிறந்தவர்களின் குணம் : வருந்தத்தக்க செயல்கள் புரிபவன், நன்னடத்தையற்றவன், பழுதான நகங்களையுடையவன், மந்திர தந்திரங்கள் அறிந்தவன், முரட்டுக் குணம் உடையவன்.


      சதுர்த்தி திதியில் செய்யத்தக்கவைகள் : எதிரியை அழித்தல், எதிரிகளைக் கட்டுப்படுத்துவது, ஆயுதப்பயிற்சி, விஷப் பிரயோகம், எரியூட்டுதல், மங்கள காரியங்கள் செய்தால் ஒரு மாத காலத்தில் அழிவைக் காணும்.



20. சோதிடவியலில் திதி கிருஷ்ண பஞ்சமியின் தன்மை :

    பஞ்சமி திதி தேவதையின் நிறம்             : வெண்மை       
    பஞ்சமி திதி தேவதையின் ஆபரணம்     : ஜபமாலை     
    பஞ்சமி திதி தேவதையின் ஆயுதம்        : கிண்டி        
    பஞ்சமி திதியின் அபிமான தேவதை      : ஸர்பம்     
    பஞ்சமி திதியின் விஷநாடி                      : 24 நாழிகைகளுக்கு மேல் 
    (சாராவளிப்படி)                                                   4 நாழிகைகள்.

       பஞ்சமி திதியில் பிறந்தவர்களின் குணம் : அழகானவன், அதிக காமமுடையவன், கலைகளைக் கற்றவன், பொறுமை மிக்கவன், தன்னை நாடியவர்களிடத்து அன்புடையவன், கவிஞன் மற்றும் கருணையால் புகழ்பெற்ற வரலாறு உடையவன்.

       பஞ்சமி திதியில் செய்யத்தக்கவைகள் : யாத்திரை உபநயனம், திருமணம், தேவதைகளை பிரதிஷ்டை செய்தல் மற்றும் சாந்தி கருமங்கள் பஞ்சமியில் செய்யப்படும் எல்லாச் செயல்களும் வெகு காலம் நிலைத்து நிற்கும்.



21. சோதிடவியலில் திதி கிருஷ்ண ஷஷ்டியின் தன்மை :

    ஷஷ்டி திதி தேவதையின் நிறம்             : சிகப்பு
    ஷஷ்டி திதி தேவதையின் முகங்கள்      ஒரு முகம்
    ஷஷ்டி திதி தேவதையின் கண்கள்         மூன்று
    ஷஷ்டி திதி தேவதையின் ஆபரணம்     : நீலக்கற்களால் ஆன
                                                                         குண்டலம் சடையில் சந்திரகலை
    ஷஷ்டி திதி தேவதையின் ஆடை           : சிகப்பு ஆடை 
    ஷஷ்டி திதி தேவதையின் வாகனம்       மயில்         
    ஷஷ்டி திதியின் அபிமான தேவதை      : முருகன்      
    ஷஷ்டி திதியின் விஷநாடி                      : 20 நாழிகைகளுக்கு மேல் 
    (சாராவளிப்படி)                                                   4 நாழிகைகள்.

       ஷஷ்டி திதியில் பிறந்தவர்களின் குணம் : பிறரால் வெல்ல முடியாதவன், உடல் வலிமையும் மிக்கவன், புகழ் பெற்றவன், எளிதில் கோபம் கொள்பவன், மக்களுக்குத் தலைவன், முகம், தலை, உடலின் பின் பகுதியில் மச்சம் உள்ளவன்.

       ஷஷ்டி திதியில் செய்யத்தக்கவைகள் : பிறரிடம் சேவகம் செய்தல், ஆபரணங்கள் செய்தல், நாற்கால் பிராணிகள் வாங்குதல், மனை வாங்குதல், விற்றல் மற்றும் மருந்து தயாரித்தல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக