செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

ஊழல்வாதிகள் பட்டியலில் சோனியா, ராகுல் காந்தி!

ஊழல்வாதிகள் பட்டியலில் சோனியா, சென்னையில் கெஜ்ரிவால் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து காங்கிரசார் மறியல்.


    ஆம் ஆத்மி கட்சி தலைவரும், புதுடெல்லி முதல்–மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் அரசியல் தலைவர்கள் பட்டியலை வெளியிட்டார்.

     இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய மந்திரிகளின் பெயர் இடம்பெற்றிருந்தது. சோனியா மற்றும் ராகுல்காந்தியின் பெயரும் இடம்பெற்று இருப்பதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

     இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி சென்னை மயிலாப்பூரில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து, அவருக்கு எதிரான கோஷத்தை எழுப்பினர். மேலும் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் 100 பேரை கைது செய்தனர்.

நன்றி : தந்தி நியூஸ்.

6 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு