வெள்ளி, 25 மே, 2012

மதுரை ஆதீனம்

     திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீன மடத்தின் நிலை இவ்வாறு ஆகுமென்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பிரம்மச்சாரிகள் மட்டுமே உட்கார வேண்டிய பீடத்தில் காமக் கலைகளுக்கு நாயகனான நித்யானந்தா அமர வைக்க படுவார் என்பதை மனசாட்சியுள்ள யாருமே அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 
     
     ஆதீன கர்த்தராக தேர்ந்தேடுக்கப்படுபவர் பல்வேறுவிதமான பயிற்சிகள் பெற்று பல்வேறு சோதனைகளைக் கடந்து பதவிக்கு வரவேண்டும். முக்கியமாக கடுமையான பிரம்மச்சரிய விரதத்தை மேற்க்கொள்ள வேண்டும். ஆனால் இவற்றில் ஒரு தகுதி கூட இல்லாத நித்யானந்தா ஆதீனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தகுதியான வேறு நபர்கள் இல்லையா? என்ன நிர்பந்தம்? பிரம்மச்சாரிகள் மடத்தில் கன்னிப் பெண்கள் நுழையலாமா? அவர்களுக்கு அங்கு என்ன வேலை? பரியங்க யோகம் செய்து பார்க்கவா?
     
     இதை எதிர்த்து போராடும் அனைத்து ஆதீனங்களையும் நித்யானந்தா கேவலமான வார்த்தைகளால் பேசி வருகிறார். இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். மக்களை முட்டாள்கள் என்று நினைத்திருக்கிறாரா? பணத்திற்காகவும், பெண் சுகத்திற்காகவும், சிலர் விலை போகலாம். ஆனால் சொக்கநாதரின் திருவிளையாடல்கள் ஆரம்பித்து விட்டால் இவர் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார். 
     
      நேற்று இவரும் ஆதீனமும் பழனி மலைக் கோயிலுக்கு வந்தவர்கள் காலில் செருப்புடன் கோயிலுக்குள் நுழைய முயன்றிருக்கிறார். தெய்வமும், அரசாங்கமும என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?. மனம் கொதிக்க வில்லையா? மக்களின் எதிர்ப்பை பார்த்தவுடன் செருப்பை வயதில் மூத்த ஒரு நபரிடம் கொடுத்துவிட்டு சென்றிக்கிறார். அந்த மானங்கெட்ட மனிதனும் செருப்பை கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்தார். இவை அனைத்தும் பத்திரிக்கைகளில் படத்துடன் வெளிவந்துள்ளது. இதுதான் ஆன்மீகம்!     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக