கூற்றுதைத்தான்!
2. போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நால்திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை
மேல்திசைக்குள் தென் திசைக்குஒரு வேந்தனாம்
கூற்றுஉதைத் தானை யான் கூறுகின் றேனே.
இனிமையான உயிரிலே பொருந்தியிருக்கும் தூயவனாகவும், நான்கு திசைகளுக்கும் பராசக்திக்கும் தலைவனாகவும், மேல்சொல்லப்பட்ட திசைகளுள் தெற்குத் திக்கிற்குரிய இயமனை உதைத்தவனாகவும் அவ்விறைவனை புகழ்ந்து நான் பாடுகின்றேன்.
விளக்கம் : கூற்று உதைத்தல் - இருளைப் போக்குதல். கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்னும் இத்திசைகளைத் தலையின் முன், பின், வலம், இடம் என்ற இடங்களிலே கொள்ளுதல் வேண்டும்.
யோகிக்குத் தலையின் பின்புறம் மேற்கு என்க.
உயிரில் பொருந்தி இருளைப் போக்கும் இறைவனை வணங்கிப் போற்ற வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக