வியாழன், 24 மே, 2012

திருமந்திரம் 3

இறைவன் விளங்கும் திறன்.
                                   
3.                          ஒக்க நின்றானை, உலப்புஇலி தேவர்கள்
                             நக்கன் என்று ஏத்திடும் நாதனை நாள்தொறும் 
                             பக்கம்நின்றார்அறி யாத பரமனைப் 
                             புக்கு நின்று உன்னி யான் போற்றிசெய் வேனே.

     உடனாய் நிற்பவன். அழிவற்ற தேவர்கள் ஆடையற்றவன் எனப் பரவும் தலைவன். பக்கத்தில் உள்ள திருமால் முதலிய தேவர்கள் அறிய முடியாத மேலோன். இத்தகைய இறைவனை நான் அணுகி நின்று நாள்தோறும் வழிபடுவேன்.

     விளக்கம் : உலப்பிலி - அழிவற்றவன். ஒக்க நிற்றல் - உயிர்களுடன் கலந்து நிற்றல். பக்கம் நின்றார் அறியாத பரமன் - இதற்கு ' முத்திபெற்றவரும் அறியாத இறைவன் ' எனவும் பொருள் கொள்ளலாம். நக்கன் - ஆடையற்றவன். புக்கு நின்று - அணுகி நின்று; இறைவனின் அருளில் அடங்கி நின்று எனவும் பொருள் கொள்ளலாம்.  

     
     



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக