வெள்ளி, 25 மே, 2012

திருமந்திரம் 4

இறைவனை வணங்கி அறியாமை நீங்கப்பெற்றேன்!

4.                     அகல்இடத் தார்மெய்யை, அண்டத்து வித்தைப்,
                        புகல்இடத்து என் றனைப் போதவிட் டானைப்
                        பகல்இடத்தும்இர வும்பணிந்து ஏத்தி
                        இகல்இடத்தே இருள் நீங்கி நின்றேனே.

     அகன்ற சீவர்களுக்கு மெய்ப்பொருள் ஆனவன். வானுலகத்துக்கு வித்துப் போன்றவன். அடைக்கலமான இடத்திலே என்னைச் செல்ல விட்டவன். இத்தகு இயல்பு வாய்ந்த இறைவனைப் பகலிலும் இரவிலும் வணங்கித் துதித்து மாறுபாடு உடைய இவ்வுலகில் நான் அறியாமை நீங்கப் பெற்றேன். 

     விளக்கம் :  வான் உலகத்துக்குக் காரணமானவன் இறைவன். ஆதலால் அண்டத்து வித்து என்றார். புகலிடம் - அடைக்கலமான இடம்; பொதிந்து வைத்த இடம் என்றும் கொள்ளலாம். இங்கே ஆசிரியர் திருமூலர் தம் உடலை மறைவித்ததைக் குறிப்பிட்டார் என்பது குறிப்பு. இறைவனை வழிபடின் அறியாமை நீங்கும் என்க.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக