வியாழன், 31 மே, 2012

அரசியல் ரீதியாக வ.உ.சி இனம் புறக்கணிக்கப்படுகிறது


        கப்பலோட்டிய தமிழன் வ .உ .சி பெயர் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வைத்து இருப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் இந்த பெயர் மாற்றம்  வெறும் வார்த்தையாக இல்லாமல் எழுத்து பூர்வமாக சுங்க துறையிலும், கடவு சிட்டிலும் முறையாக பதிவு செய்யபடுகிறதா என்பதை மத்திய அரசாங்கம் கவனிக்க வேண்டும்.மத்திய அரசு ஆணையை மதிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும். தூத்துக்குடி துறைமுக உறுப்பினராக வருவதற்கு அரசியல் ரீதியாக வ.உ.சி  இனம் புறக்கணிக்க படுகிறதுமத்திய,மாநில கட்சிகள்  ஒரு அமைச்சர் பதவியோ அரசியல் அங்கீகாரமோ நமது இனத்திற்கு தருவதில்லை.
  
தூத்துக்குடி வ.உ.சி சந்தையின் பெயர் சில விசக்கிருமிகளால் வரலாற்றில் மறைக்கபடுகிறது. நமது சமுதாயம் இதைக் கருத்தில் கொண்டு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். அரசியலை மாற்றக்கூடிய சக்தி நமக்கு உள்ளது. சிந்திப்பீர்! வாக்களிப்பீர்!!

செவ்வாய், 29 மே, 2012

திருவாசகம் முழு பதிகங்கள் 52


திருவாசகம் முழு பதிகங்கள் 52 - மற்றதொரு புதிய வெளியிடு 


பாடியவர் மயிலை கபாலீஸ்வரர் கோவில் 
ஓதுவார் திரு சத்குருநாதன் தனது தேன் மதுரக்குரலில் பாடிய பாடல்கள். பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள் 

இங்கு தேவாரம் & திருமுறை பாடல்களை பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் கேட்கலாம்

இணையத்தில் தேவாரம் , திருவாசகம் , திருமுறைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய முதன்மை வலைத்திரட்டி :




or 

தேவாரம்,திருவாசகம்,மற்றும் திருமுறைகளை இலவசமாக இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம், சுமார் 10 GB அளவு பாடல்கள் உள்ளன , மேலும் 63 நாயன்மார்களின் வாழ்கை வரலாறு சித்திர வீடியோ (கார்ட்டூன்) வடிவில் உள்ளது. இன்னும் நிறைய உள்ளன , சென்று உலாவுங்களேன். நன்றி

நன்றி : சைவநெறி 

திங்கள், 28 மே, 2012

ஞாயிறு, 27 மே, 2012

உடல்நலம்

உடல்நலம்

' ஹிந்து' வும் சைவமும்

சனி, 26 மே, 2012

தேவாரம், திருவாசகம் பாடல்கள்

திருவாசகம் தெய்வீக குரலிசையும் , குழலிசையும் MP 3 பாடல்கள் 
வெளியிடு : ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் , சிங்கப்பூர்.  


இங்கு தேவாரம் மற்றும் திருமுறை பாடல்களை பதிவிறக்கம் செய்யலாம். மற்றும் கேட்கலாம். இணையத்தில் தேவாரம் திருவாசகம், திருமுறைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய முதன்மை வலைத்திரட்டி.

    தேவாரம், திருவாசகம், மற்றும் திருமுறைகளை இலவசமாக இணையத்தில பதிவிறக்கம் செய்யலாம், சுமார் 10 GB அளவு பாடல்கள் உள்ளன, மேலும் 63 நாயன்மார்களின் வாழ்கை வரலாறு சித்திர வீடியோ (கார்ட்டூன்) வடிவில் உள்ளது. 

நன்றி : சைவநெறி  







     





  


     






வெள்ளி, 25 மே, 2012

மதுரை ஆதீனம்

     திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீன மடத்தின் நிலை இவ்வாறு ஆகுமென்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பிரம்மச்சாரிகள் மட்டுமே உட்கார வேண்டிய பீடத்தில் காமக் கலைகளுக்கு நாயகனான நித்யானந்தா அமர வைக்க படுவார் என்பதை மனசாட்சியுள்ள யாருமே அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 
     
     ஆதீன கர்த்தராக தேர்ந்தேடுக்கப்படுபவர் பல்வேறுவிதமான பயிற்சிகள் பெற்று பல்வேறு சோதனைகளைக் கடந்து பதவிக்கு வரவேண்டும். முக்கியமாக கடுமையான பிரம்மச்சரிய விரதத்தை மேற்க்கொள்ள வேண்டும். ஆனால் இவற்றில் ஒரு தகுதி கூட இல்லாத நித்யானந்தா ஆதீனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தகுதியான வேறு நபர்கள் இல்லையா? என்ன நிர்பந்தம்? பிரம்மச்சாரிகள் மடத்தில் கன்னிப் பெண்கள் நுழையலாமா? அவர்களுக்கு அங்கு என்ன வேலை? பரியங்க யோகம் செய்து பார்க்கவா?
     
     இதை எதிர்த்து போராடும் அனைத்து ஆதீனங்களையும் நித்யானந்தா கேவலமான வார்த்தைகளால் பேசி வருகிறார். இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். மக்களை முட்டாள்கள் என்று நினைத்திருக்கிறாரா? பணத்திற்காகவும், பெண் சுகத்திற்காகவும், சிலர் விலை போகலாம். ஆனால் சொக்கநாதரின் திருவிளையாடல்கள் ஆரம்பித்து விட்டால் இவர் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார். 
     
      நேற்று இவரும் ஆதீனமும் பழனி மலைக் கோயிலுக்கு வந்தவர்கள் காலில் செருப்புடன் கோயிலுக்குள் நுழைய முயன்றிருக்கிறார். தெய்வமும், அரசாங்கமும என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?. மனம் கொதிக்க வில்லையா? மக்களின் எதிர்ப்பை பார்த்தவுடன் செருப்பை வயதில் மூத்த ஒரு நபரிடம் கொடுத்துவிட்டு சென்றிக்கிறார். அந்த மானங்கெட்ட மனிதனும் செருப்பை கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்தார். இவை அனைத்தும் பத்திரிக்கைகளில் படத்துடன் வெளிவந்துள்ளது. இதுதான் ஆன்மீகம்!     

திருமந்திரம் 4

இறைவனை வணங்கி அறியாமை நீங்கப்பெற்றேன்!

4.                     அகல்இடத் தார்மெய்யை, அண்டத்து வித்தைப்,
                        புகல்இடத்து என் றனைப் போதவிட் டானைப்
                        பகல்இடத்தும்இர வும்பணிந்து ஏத்தி
                        இகல்இடத்தே இருள் நீங்கி நின்றேனே.

     அகன்ற சீவர்களுக்கு மெய்ப்பொருள் ஆனவன். வானுலகத்துக்கு வித்துப் போன்றவன். அடைக்கலமான இடத்திலே என்னைச் செல்ல விட்டவன். இத்தகு இயல்பு வாய்ந்த இறைவனைப் பகலிலும் இரவிலும் வணங்கித் துதித்து மாறுபாடு உடைய இவ்வுலகில் நான் அறியாமை நீங்கப் பெற்றேன். 

     விளக்கம் :  வான் உலகத்துக்குக் காரணமானவன் இறைவன். ஆதலால் அண்டத்து வித்து என்றார். புகலிடம் - அடைக்கலமான இடம்; பொதிந்து வைத்த இடம் என்றும் கொள்ளலாம். இங்கே ஆசிரியர் திருமூலர் தம் உடலை மறைவித்ததைக் குறிப்பிட்டார் என்பது குறிப்பு. இறைவனை வழிபடின் அறியாமை நீங்கும் என்க.



வியாழன், 24 மே, 2012

திருமந்திரம் 2

கூற்றுதைத்தான்!

                                   
2.                  போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை 
                     நால்திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை 
                     மேல்திசைக்குள் தென் திசைக்குஒரு வேந்தனாம் 
                     கூற்றுஉதைத் தானை யான் கூறுகின் றேனே.

     இனிமையான உயிரிலே பொருந்தியிருக்கும் தூயவனாகவும், நான்கு திசைகளுக்கும் பராசக்திக்கும் தலைவனாகவும், மேல்சொல்லப்பட்ட திசைகளுள் தெற்குத் திக்கிற்குரிய இயமனை உதைத்தவனாகவும் அவ்விறைவனை புகழ்ந்து நான் பாடுகின்றேன்.

     விளக்கம் :  கூற்று உதைத்தல் - இருளைப் போக்குதல். கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்னும் இத்திசைகளைத் தலையின் முன், பின், வலம், இடம் என்ற இடங்களிலே கொள்ளுதல் வேண்டும்.

       யோகிக்குத் தலையின் பின்புறம் மேற்கு என்க.

     உயிரில் பொருந்தி இருளைப் போக்கும் இறைவனை வணங்கிப் போற்ற வேண்டும்.

     

திருமந்திரம் 3

இறைவன் விளங்கும் திறன்.
                                   
3.                          ஒக்க நின்றானை, உலப்புஇலி தேவர்கள்
                             நக்கன் என்று ஏத்திடும் நாதனை நாள்தொறும் 
                             பக்கம்நின்றார்அறி யாத பரமனைப் 
                             புக்கு நின்று உன்னி யான் போற்றிசெய் வேனே.

     உடனாய் நிற்பவன். அழிவற்ற தேவர்கள் ஆடையற்றவன் எனப் பரவும் தலைவன். பக்கத்தில் உள்ள திருமால் முதலிய தேவர்கள் அறிய முடியாத மேலோன். இத்தகைய இறைவனை நான் அணுகி நின்று நாள்தோறும் வழிபடுவேன்.

     விளக்கம் : உலப்பிலி - அழிவற்றவன். ஒக்க நிற்றல் - உயிர்களுடன் கலந்து நிற்றல். பக்கம் நின்றார் அறியாத பரமன் - இதற்கு ' முத்திபெற்றவரும் அறியாத இறைவன் ' எனவும் பொருள் கொள்ளலாம். நக்கன் - ஆடையற்றவன். புக்கு நின்று - அணுகி நின்று; இறைவனின் அருளில் அடங்கி நின்று எனவும் பொருள் கொள்ளலாம்.  

     
     



புதன், 23 மே, 2012

சமூகம் மற்றும் அரசியல்


     இன்று நாட்டில் அடுத்த ஜனாதிபதியாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற விவாதம் அரசியல் கட்சிகளிடையே மௌனமாக திரைமறைவில் நடைபெற்றுகொன்று இருக்கிறது. எந்த கட்சி யாரை தேர்ந்து எடுக்கும் என்று யாருக்குமே தெரியாது.
     இந்த சமயத்தில் தமிழ் நாட்டின் முதல்வர் முன்னாள் சபாநாயகர் பி. ஏ. சங்மா அவர்களை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.பல செய்தி பத்திரிக்கைகளைப் படித்துப் பார்த்ததில் இவரே மிகப் பொருத்தமானவராக தெரிகிறார். ஆனால் காங்கிரஸ் இவரை ஆதரிக்காது. பி ஜே பி கட்சிக்கும் அவ்வளவு விருப்பம் இல்லை என்று கட்சித்தலைவர்களின் மௌனத்தை வைத்தே கூறிவிடலாம். 
     எது எப்படியோ பிரணாப் முகர்ஜியா, சங்மாவா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.