வெள்ளி, 28 டிசம்பர், 2012

ASTROLOGY - 39 : ஜோதிடம் - ஆண்டுகள் - ஸ்வரூபம்.


31.  ஹேவிளம்பி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்தொன்றாவது ஆண்டாகும்.
2. ஹேவிளம்பி ஆண்டின் அதிதேவதை   : ஆதித்யன் 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : சோர்வடைந்த மேனி, சிவந்த  
                                                                        கண்கள், தாயின் அருகில்  
                                                                        உள்ளவர், புத்திமான்.

புதன், 26 டிசம்பர், 2012

THIRUMANTIRAM - 74 திருக்கூத்தைத் தரிசித்துக் கொண்டிருந்தேன்!


74.                        செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்     
                             அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்    
                             தப்புஇலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின் 
                             ஒப்பில் எழுகோடி யுகம்இருந் தேனே.

ASTROLOGY - 38 : ஜோதிடம் - ஆண்டுகள் - ஸ்வரூபம்.


21.  சர்வஜித் ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தியோராவது ஆண்டாகும்.
2. சர்வஜித் ஆண்டின் அதிதேவதை           : ஜ்யோதிஷ்மான் 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : அழகிய கைகள், நீண்ட மூக்கு, நீள்  
                                                                        முகம், மெல்லிய உதடு, எல்லாச்  
                                                                        செயல்களையும் சாதிக்க வல்ல 
                                                                        தோற்றம். 
5. சர்வஜித் ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     அரசனின் கௌரவம் காப்பவன், விழாக்களைக் கொண்டாடுபவன், மாசற்றவன், பருத்த உடம்பையுடையவன், மேனியழகு மிக்கவன், எப்பொழுதும் பகைவரை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டவன்.

திங்கள், 24 டிசம்பர், 2012

THIRUMANTIRAM - 73 சிவபெருமானைத் தியானித்து நூலைத் தொடங்குகின்றேன்!


73.                        நந்தி திருஅடி நான் தலைமேற் கொண்டு    
                             புந்தியின் உள்ளே புகப்பெய்து, போற்றிசெய்து   
                             அந்தி மதிபுனை அரனடி நாள்தொறும் 
                             சிந்தைசெய்து ஆகமம் செப்பலுற் றேனே. 

செவ்வாய், 11 டிசம்பர், 2012

You Want Beautiful Face : மேக்கப் போடாமலேயே அழகு முகம்!


     பெண்கள் மேக்கப் போட்டால்தான் அழகாக இருக்க முடியும் என்பதில்லை. மேக்கப் எதுவும் போடாமலேயே அழகாகத் தோன்ற முடியும். அந்த காலத்து தமிழ் பெண்கள் முகத்தை கடலை மாவு போட்டு கழுவி, மஞ்சள் பூசி குங்குமம் வைத்து அழகாக இருப்பார்கள்.