செவ்வாய், 1 அக்டோபர், 2013

Pomegranate : இருமல் நீக்கும் மாதுளம்பழம் பகுதி - 2.


     மாதுளையின் எல்லா பகுதிகளுமே மருத்துவ குணம் கொண்டது. மாதுளம் பூ, ரத்த வாந்தி, ரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு மற்றும் உடல் சூட்டை தணிக்கும். மாதுளம் பூவை கஷாயம் வைத்துக் குடித்தால், தொண்டை தொடர்புடைய பல பிணிகள் நீங்கும்.

     மாதுளம்பழ ரசத்துக்கு தாதுவை பெருக்கும் ஆற்றல் உண்டு. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குறைபாடுகளை நீக்கும். மாதுளம்பழம் மலமிளக்கும் இயல்புடையது. தினமும் பாதியளவு மாதுளம்பழத்தை சாப்பிட்டு வந்தால், மலக்கட்டு நீங்கி, மலம் இளகி இறங்கும்.


     மாதுளம் பழச்சாறும், இஞ்சி சாறும் சம அளவு எடுத்து, சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் எவ்வளவு கடுமையான இருமலும் குணமாகும். மாதுளம்பழத்தின் விதையை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து, பசுவின் பாலில் தினமும் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டால், தாது உற்பத்தி அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக