வெள்ளி, 25 மே, 2012

திருமந்திரம் 4

இறைவனை வணங்கி அறியாமை நீங்கப்பெற்றேன்!

4.                     அகல்இடத் தார்மெய்யை, அண்டத்து வித்தைப்,
                        புகல்இடத்து என் றனைப் போதவிட் டானைப்
                        பகல்இடத்தும்இர வும்பணிந்து ஏத்தி
                        இகல்இடத்தே இருள் நீங்கி நின்றேனே.

     அகன்ற சீவர்களுக்கு மெய்ப்பொருள் ஆனவன். வானுலகத்துக்கு வித்துப் போன்றவன். அடைக்கலமான இடத்திலே என்னைச் செல்ல விட்டவன். இத்தகு இயல்பு வாய்ந்த இறைவனைப் பகலிலும் இரவிலும் வணங்கித் துதித்து மாறுபாடு உடைய இவ்வுலகில் நான் அறியாமை நீங்கப் பெற்றேன். 

     விளக்கம் :  வான் உலகத்துக்குக் காரணமானவன் இறைவன். ஆதலால் அண்டத்து வித்து என்றார். புகலிடம் - அடைக்கலமான இடம்; பொதிந்து வைத்த இடம் என்றும் கொள்ளலாம். இங்கே ஆசிரியர் திருமூலர் தம் உடலை மறைவித்ததைக் குறிப்பிட்டார் என்பது குறிப்பு. இறைவனை வழிபடின் அறியாமை நீங்கும் என்க.



வியாழன், 24 மே, 2012

திருமந்திரம் 2

கூற்றுதைத்தான்!

                                   
2.                  போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை 
                     நால்திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை 
                     மேல்திசைக்குள் தென் திசைக்குஒரு வேந்தனாம் 
                     கூற்றுஉதைத் தானை யான் கூறுகின் றேனே.

     இனிமையான உயிரிலே பொருந்தியிருக்கும் தூயவனாகவும், நான்கு திசைகளுக்கும் பராசக்திக்கும் தலைவனாகவும், மேல்சொல்லப்பட்ட திசைகளுள் தெற்குத் திக்கிற்குரிய இயமனை உதைத்தவனாகவும் அவ்விறைவனை புகழ்ந்து நான் பாடுகின்றேன்.

     விளக்கம் :  கூற்று உதைத்தல் - இருளைப் போக்குதல். கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்னும் இத்திசைகளைத் தலையின் முன், பின், வலம், இடம் என்ற இடங்களிலே கொள்ளுதல் வேண்டும்.

       யோகிக்குத் தலையின் பின்புறம் மேற்கு என்க.

     உயிரில் பொருந்தி இருளைப் போக்கும் இறைவனை வணங்கிப் போற்ற வேண்டும்.

     

திருமந்திரம் 3

இறைவன் விளங்கும் திறன்.
                                   
3.                          ஒக்க நின்றானை, உலப்புஇலி தேவர்கள்
                             நக்கன் என்று ஏத்திடும் நாதனை நாள்தொறும் 
                             பக்கம்நின்றார்அறி யாத பரமனைப் 
                             புக்கு நின்று உன்னி யான் போற்றிசெய் வேனே.

     உடனாய் நிற்பவன். அழிவற்ற தேவர்கள் ஆடையற்றவன் எனப் பரவும் தலைவன். பக்கத்தில் உள்ள திருமால் முதலிய தேவர்கள் அறிய முடியாத மேலோன். இத்தகைய இறைவனை நான் அணுகி நின்று நாள்தோறும் வழிபடுவேன்.

     விளக்கம் : உலப்பிலி - அழிவற்றவன். ஒக்க நிற்றல் - உயிர்களுடன் கலந்து நிற்றல். பக்கம் நின்றார் அறியாத பரமன் - இதற்கு ' முத்திபெற்றவரும் அறியாத இறைவன் ' எனவும் பொருள் கொள்ளலாம். நக்கன் - ஆடையற்றவன். புக்கு நின்று - அணுகி நின்று; இறைவனின் அருளில் அடங்கி நின்று எனவும் பொருள் கொள்ளலாம்.  

     
     



புதன், 23 மே, 2012

சமூகம் மற்றும் அரசியல்


     இன்று நாட்டில் அடுத்த ஜனாதிபதியாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற விவாதம் அரசியல் கட்சிகளிடையே மௌனமாக திரைமறைவில் நடைபெற்றுகொன்று இருக்கிறது. எந்த கட்சி யாரை தேர்ந்து எடுக்கும் என்று யாருக்குமே தெரியாது.
     இந்த சமயத்தில் தமிழ் நாட்டின் முதல்வர் முன்னாள் சபாநாயகர் பி. ஏ. சங்மா அவர்களை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.பல செய்தி பத்திரிக்கைகளைப் படித்துப் பார்த்ததில் இவரே மிகப் பொருத்தமானவராக தெரிகிறார். ஆனால் காங்கிரஸ் இவரை ஆதரிக்காது. பி ஜே பி கட்சிக்கும் அவ்வளவு விருப்பம் இல்லை என்று கட்சித்தலைவர்களின் மௌனத்தை வைத்தே கூறிவிடலாம். 
     எது எப்படியோ பிரணாப் முகர்ஜியா, சங்மாவா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும். 

சனி, 14 ஏப்ரல், 2012

சிவபரத்துவ நிச்சயம். ( நன்றி சைவ நெறி )


Shivaparathuva Nichayam