வான்பற்றி நின்ற மறைப்பொருள், சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுஉறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே.
நான் இறைவனை நினைந்து பெற்றிட்ட இன்பத்தை இந்த உலகம் அடைவதாகுக. வானை இடமாகக் கொண்ட அறிவு வடிவான சிவத்தைப் பற்றிச் சொல்லப் போனால், அது உடலைப் பற்றிய உணர்வாய் விளங்கும் மந்திரமாகும். நீவிர் அத்தகைய உணர்வை அடிக்கடி முயன்று பற்றிக் கொண்டால் சிவம் வந்து உங்களிடம் பொருந்தி விடும்.
விளக்கம் : மறைப் பொருளைச் சிந்தித்தால் சிரசில் உணர்வு உண்டாகும். தலைப்படுதல் - கூடுதல். ஊன்பற்றி - தசையுடைய நாவைப் பற்றி.
விளக்கம் : மறைப் பொருளைச் சிந்தித்தால் சிரசில் உணர்வு உண்டாகும். தலைப்படுதல் - கூடுதல். ஊன்பற்றி - தசையுடைய நாவைப் பற்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக