ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

Pomegranate : மாதுளம்பழம்.


     முத்துக்களைப் பதுக்கி வைத்தவாறு இருக்கும் மாதுளை பழத்தின் அமைப்பை பார்க்கவே அம்சமாக இருக்கும். சாதாரணமாக, மாதுளம்பழத்தை உண்பவர்கள், பழத்தின் உட்புறம் இருக்கும் முத்து போன்ற பகுதியின் சாரத்தை மட்டும் சாப்பிட்டு, விதைகளை துப்பி விடுவர். ஆனால் விதைகளில்தான் சத்துக்கள் பொதிந்திருக்கின்றன.

     மாதுளையில் புரதசத்து 1.6 சதவீதம், 
                              கொழுப்பு 0.5 சதவீதம், 
                              நார்ச்சத்து 5.0 சதவீதம், 
                              கார்போஹைட்ரேட் எரிபொருள் 14.5 சதவீதம், 
                              தாதுக்கள் 0.7 சதவீதம், 
                              சுண்ணாம்பு சத்து 10 சதவீதம், 
                              மக்னீசியம் 12 சதவீதம், 
                              கந்தகம் 12 சதவீதம், 
                              குளோரின் 20 சதவீதம் அடங்கியுள்ளன.

     இன்னும் பல பல சத்துக்களை தன்னுள் வைத்திருக்கிறது மாதுளை. வைட்டமின் 'சி' சத்து மட்டும் 16 மில்லி கிராம் உள்ளது. எனவே இனிமேல் மாதுளையை விதைகளுடன் உண்போம். ஆரோக்கியமான வாழ்விற்கு வித்திடுவோம்.


1 கருத்து: