உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே.
உள்ளத்தில் சிறந்து விளங்கும் நூல்களில் மிகச் சிறந்ததாகக் கூறப் பெறும் வேதத்தின் உடலான சொல்லையும் அந்த உடலுள் இருந்து உற்பத்தியாகும் பொருளையும் இறைவன் தனக்குண்டான கருணையால் எனக்கு இங்கு உணர்த்தியருள் செய்தான்.
விளக்கம் : சிவபெருமான் வேதத்தின் சொல்லையும் பொருளையும் அருளிச் செய்தான். உடல் - சொல். உற்பத்தி - பொருள்.
விளக்கம் : சிவபெருமான் வேதத்தின் சொல்லையும் பொருளையும் அருளிச் செய்தான். உடல் - சொல். உற்பத்தி - பொருள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக