புதன், 24 ஏப்ரல், 2013

ASTROLOGY - 40 : ஜோதிடம் - ஆண்டுகள் - ஸ்வரூபம்.


41.  பிலவங்க ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பத்தியோராவது ஆண்டாகும்.
2. பிலவங்க ஆண்டின் அதிதேவதை         : பங்க்திராதஸன் 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : தாமரையின் எதிரில் நிற்பவர்.  
                                                                        இளமைப் பருவம், இறுமாப்பான 
                                                                        தோற்றம். 
5. பிலவங்க ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     சஞ்சலபுத்தி, நற்செயல்களில் ஈடுபாடு இல்லாதவன், அயோக்கியன், ஒழுக்கமற்றவன்.


42.  கீலக ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பத்தியிரண்டாவது ஆண்டாகும்.
2. கீலக ஆண்டின் அதிதேவதை                 : விஸர்பி
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : தலை மீது பானை, சட்டி  
                                                                        கொண்டவர்கள், மலையின்  
                                                                        சமதளத்தில் தியானம் செய்பவர். 
5. கீலக ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
         நடுத்தரமான அழகு, இனிமையான பேச்சு, இரக்க குணம், நீரை விரும்பும் குணம்,  பருத்த கால்கள்  மற்றும் அழகிய தலையுடன் கூடியவன், பகைவர்களை ஒடுக்குபவனாயும் இருப்பான்.


43.  ஸௌமிய ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பத்து மூன்றாவது ஆண்டாகும்.
2. ஸௌமிய ஆண்டின் அதிதேவதை        : மத்ஸ்ய மூர்த்தி
3. அதிதேவதையின் நிறம்                          : வெண்மை   
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : தலை மீது பானை, சட்டி  
                                                                        கொண்டவர்கள், மலையின்  
                                                                        சமதளத்தில் தியானம் செய்பவர். 
5. ஸௌமிய ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     அறிவாளி, செல்வந்தன், போகங்களைத் துய்ப்பவன், விருந்தாளிகளிடத்தும், தேவதைகளிடத்தும் அன்பு கொண்டவன், தூய்மையானவன், சத்துவ குணம் கொண்டவன், இளைத்த மேனி உடையவன்.44.  ஸாதாரண ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பத்து நான்காவது ஆண்டாகும்.
2. ஸாதாரண ஆண்டின் அதிதேவதை       : கூர்ம மூர்த்தி
3. அதிதேவதையின் நிறம்                          : தங்கநிறம்    
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : சரஸ்வதி நதிதீரத்தில் உள்ளவர்.  
                                                                        பரமேஸ்வரனை வணங்குபவர். 
5. ஸாதாரண ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     தேவ சஞ்சாரி, ஆசை மிகுந்தவன், எழுதுவதில் ஈடுபாடு கொண்டவன், மிகுந்த வெகுளி கொண்டவன், தூய்மையானவன், போகங்களில் அதிக ஈடுபாடற்றவன்.45.  விரோதிகிருது ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பத்து ஐந்தாவது ஆண்டாகும்.
2. விரோதிகிருது ஆண்டின் அதிதேவதை : வராஹமூர்த்தி
3. அதிதேவதையின் நிறம்                          : நீல நிறம்    
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : கொடுமையான செயல்களைப்  
                                                                        புரிபவர், விலங்குகளை  
                                                                        வதைப்பவர், வில்லும், அம்பும்  
                                                                        கொண்டவர், சிவந்த கண்கள்,  
                                                                        பருத்த உடல் உடையவர். 
5. விரோதிகிருது ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     ஈஸ்வர பூஜை செய்பவன், மிகுந்த வெகுளி கொண்டவன், பிறருக்கு கெடுதல் செய்பவன், தந்தை சொல் கேளாதவன்.46.  பரிதாபி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பத்து ஆறாவது ஆண்டாகும்.
2. பரிதாபி ஆண்டின் அதிதேவதை             : நரசிம்ம மூர்த்தி
3. அதிதேவதையின் நிறம்                          : வெண்மை     
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : மான் தோல் அணிந்தவர், வில் 
                                                                        கைக்கொண்டவர், கோணலான  
                                                                        கண்கள், விலங்குகளை  
                                                                        வதைப்பவர், கானகத்தில் 
                                                                        அலைபவர். 
5. பரிதாபி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
       கல்வியறிவு மிக்கவன், கலைகளில் சிறந்த ஈடுபாடு கொண்டவன், சிறந்த  அறிவாளி, மன்னர்களால் மதிக்கப்படுபவன், வாணிபத்தில் பெரும் செல்வம் மற்றும் புகழ் ஈட்டுபவன். 47.  பிரமாதீச ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பத்து ஏழாவது ஆண்டாகும்.
2. பிரமாதீச ஆண்டின் அதிதேவதை          : வாமன மூர்த்தி
3. அதிதேவதையின் நிறம்                          : பச்சை      
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : மெலிந்த உடல், திருநீறணிந்த  
                                                                        முகம், காட்டில் நதிக்கரையில் 
                                                                        உள்ளவர், சூரியனை 
                                                                        வணங்குபவர்.
5. பிரமாதீச ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
       தீயோர்களிடம் மற்றும் தீச்செயல்களில் ஈடுபாடு, கலகம் செய்பவன், கெட்ட குணங்கள் மிக்கவன், குடும்பத்தில் பற்று உள்ளவன், இரக்கப்படத் தக்கவன், சிற்றரிவாளன், இகழத்தக்க செயல்களைப் புரிபவன், பிழைகள் மலிந்தவன்.48.  ஆனந்த ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பத்து எட்டாவது ஆண்டாகும்.
2. ஆனந்த ஆண்டின் அதிதேவதை             : ஸ்ரீராமன்
3. அதிதேவதையின் நிறம்                          : பச்சை      
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : ஜபமாலை அணிந்தவர், திருமண்  
                                                                        அணிந்தவர், மக்கள் நடமாட்ட  
                                                                        மற்ற காட்டில் உறைபவர். 
5. ஆனந்த ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
       அதிகமான தானம் செய்பவன், சாதுர்யமுடையவன், சாமர்த்தியம்  மிக்கவன், நற்குணம் மிக்க பிள்ளைகளால் மகிழ்பவன், மேதாவி, செய்நன்றி மற்றும் அடக்கம் உடையவன்.49.  ராக்ஷஸ ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பத்து ஒன்பதாவது ஆண்டாகும்.
2. ராக்ஷஸ ஆண்டின் அதிதேவதை           : பரசுராமன்
3. அதிதேவதையின் நிறம்                          : பொன்னிறம்      
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : தோளில் தடி கொண்டவர்,  
                                                                        பாறாங்கல் கைக்கொண்டவர்,  
                                                                        காட்டில் வசிப்பவர், 
                                                                        வழிப்போக்கர்களைத் தடுப்பவர், 
                                                                        நாய்மீது பயணம் செய்பவர்.
5. ராக்ஷஸ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
       கொடூரமான செயல்கள் செய்பவன், கலகங்கள் செய்பவன், நல்ல செயல்களைச் செய்யாதவன், இரக்கமற்றவன் மற்றும் சாகஸம்  உடையவன்.50.  நள ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பதாவது ஆண்டாகும்.
2. நள ஆண்டின் அதிதேவதை                    : பலராமன்
3. அதிதேவதையின் நிறம்                          : வெண்மை      
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : சடைமுடி, மீசை, தாடி உள்ளவர்,  
                                                                        சாந்தமான தோற்றம், மரவுரி,  
                                                                        விபூதி அணிந்தவர், நீரின் நடுவில் 
                                                                        உள்ளவர்.
5. நள ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
       சிறந்த அறிவாளி, நீர், பயிர், செல்வம், வணிகர் இவர்களை அனுசரித்து நடப்பவன், பெரிய செல்வந்தன், பிறரைக் காப்பவன், சஞ்சல புத்தியுள்ளவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக