வியாழன், 6 பிப்ரவரி, 2014

THIRUMANTIRAM - 89 : என்முடி மீது அடி சூட்டினான்!


89.                        பெற்றமும் மானும் மழுவும் பிரிவுஅற்ற              
                             தற்பரன் கற்பனை ஆகும் சராசரத்து   
                             அற்றமும் நல்கி, அடியேன் சிரத்தினில்     
                             நற்பத மும்அளித்தான் எங்கள் நந்தியே.

     காளை, மான், மழு ஆகியவற்றைப் பிரிவில்லாமல் கொண்ட மேலான பரம்பொருளின் கற்பனையாய் அமைந்தது இவ்வுலகு. இதில் எங்கள் குருநாதனான நந்தி, ஒழிவினைத் தந்து, அடியேன் முடியின் மீது, தன் மேலான திருவடியையும் சூட்டினான்.   
   
     விளக்கம் : நந்தி - சிவபெருமான். பெற்றம் - காளை. மழு - மழு என்ற ஆயுதம். தற்பரன் - மேலான இறைவன். கற்பனை - கட்டளை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக