செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

பலருக்குத் தெரியாத உண்மை!


     இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்ற இந்திய அரசாங்கம் இரண்டு பேரை தேர்ந்தெடுத்தது. ஒருவர் "வ. உ. சி பிள்ளை", மற்றொருவர் டாக்டர் "அம்பேத்கர்" ஆனால் தன்னை விட அதிகம் படித்தவர், நல்ல சிந்தனையாளர் நல்ல  மனிதர்  என்று   மேலிடத்தில்   சொல்லி   டாக்டர்.  அம்பேத்கருக்கு, வ. உ. சி பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து விட்டார். டாக்டர் அம்பேத்கர் தன் சுயசரிதையில் இந்த நிகழ்வை பெருமையாக எழுதி வைத்துள்ளார்.

     அய்யா வ. உ. சி.யை பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது? ஆனால் அவரை முழுசாக தெரிந்தவர்கள் ஒரு சிலரே.... அய்யா வ. உ. சி. ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் மட்டும்தான் ஓட்டினாரா?  இல்லவே இல்லை அவர் பல துறைகளில் கொடிகட்டி பறந்தார்.

     முதன் முதலில் தொழிற்சங்கத்தை நிறுவினார். அதற்குத் தலைவைராகவும் இருந்தார். அன்றைய காலகட்டத்தில் தொழிற்ச்சாலைகளில் ஒரு தொழிலாளி 18 மணி நேரம் கட்டாயம் வேலை பார்க்கவேண்டும் என்று சட்டம் இருந்தது. இதை வ. உ. சி கடுமையாக எதிர்த்து போராடி ஒரு தொழிலாளி 8 மணி நேரம் தான் உழைக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவந்தார். 

     அது மட்டுமா வ. உ. சி., சிறந்த இலக்கியவாதி. அனைத்து இலக்கணங்களையும் கற்றவர். அவரிடம் போட்டி போட்டு வெற்றி பெற யாராலும் முடியாது. ஒரு காரியத்தில் இறங்கினால் முன் வைத்த காலை பின் வாங்கமாட்டார். பிடிவாதக்காரர். தாழ்த்தபட்ட மக்களை தன் உயிராக நினைத்தவர். ஏழை எளிய (Sc) மக்களுக்கு தன் வீடு வாசல் நிலங்களை இலவசமாக கொடுத்தவர். 

     அது மட்டுமா வள்ளுவர் எழுதிய திருக்குறளில் சில விஷமிகள் தங்கள் சுயநலத்துக்காக திருக்குறளை திருத்தி எழுதி வைத்தனர். இதை வ. உ. சி. கண்டுபிடித்து உண்மையான திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

     சட்டம் படித்து வழக்கறிஞர் ஆகி எழை மக்களுக்காக பணம் வாங்காமல் இலவசமாக வாதாடினார். இப்படி இன்னும் பல விஷயங்களை வ. உ. சியை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

     ஆனால் இப்படியெல்லாம் வாழ்ந்த ஒரு கோடிஸ்வர மகாமனிதர் கடைசியில் தன் குடும்பத்தை காப்பாற்ற தெருத்தெருவாக சைக்கிளில் வைத்து மண்ணெண்னை விற்று பிழைப்பு நடத்தினார் என்று சொன்னால் உங்களுக்கு இரத்தம் கொதிக்கிறதா? இல்லையா?

     வ. உ. சியின் வாழ்க்கை வரலாறை படிப்பவர் கண்கள் கலங்குவது உறுதி. வ. உ. சியின் வாழ்க்கை வரலாற்றை படிப்பது தமிழனாய் பிறந்த அனைவரது கடைமையாகும்.

உண்மை தொடரும்....

"இனைந்திருப்போம்....
இனம் வளர்ப்போம்....
இகழ்ந்து பேசினால்....
எதிர்த்தடிப்போம்........."

அன்புடன்
சுரேஷ் TTl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக