ஞாயிறு, 26 மே, 2013

Pear : பேரிக்காய்!


     சீசன் காலங்களில் மட்டும் கிடைக்கக்கூடியது பேரிக்காய். காய் என்ற அடைமொழியுடன் இருந்தாலும், இது உண்மையில் ஒரு வகை பழம்தான். மலைப்பகுதியில் விளையும் இந்த பேரிக்காயில், ஆப்பிளில் கூட இல்லாத நிறைய சத்துக்கள் உள்ளன.

புதன், 22 மே, 2013

THIRUMANTIRAM - 78 : இறைவியின் திருவடியைத் சேர்ந்திருந்தேன்.


78.                        நேரிழை ஆவாள் நிரதிச யானந்தப்       
                             பேருடை யாள்; என் பிறப்பு அறுத்து ஆண்டவள்; 
                             சீருடையாள்; சிவன் ஆவடு தண்துறைச் 
                             சீருடை யாள்பதம் செர்ந்திருந் தேனே. 

செவ்வாய், 21 மே, 2013

ASTROLOGY - 44 : மாதங்கள்.


     மாதங்கள் இருவகைப்படும். 1. சாந்திரமானம் 2. சௌரமானம்.

     சூரியனும் சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில் காணப்படுவது அமாவாசை எனப்படும். அமாவாசைக்கு மறுநாளிலிருந்து புதிய மாதம் ஆரம்பமாகும். இவ்வழக்கம் ஆந்திரம், கர்நாடகம் மற்றும் இந்திய பொது மாத வழக்கிலும் காணப்படுகிறது. இவ்வகை மாதங்களுக்கு சாந்திரமான மாதங்கள் என்று பெயர். சந்திரன் சூரியனுடன் சேர்ந்திருப்பதைக் கணக்கிட்டு மாதங்கள் கணக்கிடப்படுவதால் சாந்திரமான மாதங்கள் எனப்படுகிறது. இவை மொத்தம் பன்னிரெண்டு மாதங்களாகும். அவையாவன :

திங்கள், 20 மே, 2013

Fenugreek : வெந்தயம் - வெந்தயக் கீரை.


     நம் நாட்டில் வெந்தயக்கீரையின் மகத்துவத்தினை அனைவருமே அறிந்து இருப்பார்கள். கீரை வகைகளில் பலவகை உண்டு. அவற்றில் பலவகை மருத்துவ குணம் வாய்ந்தவைகளாக இருப்பது போல் வெந்தயக்கீரையிலும் சில மருத்துவ குணங்கள் உண்டு.

ஞாயிறு, 19 மே, 2013

Jackfruit : பலாப்பழம்! (பழங்களின் அரசன்)


     முக்கனிகள் பட்டியலில் இடம் பிடித்த கனி பலாப்பழம். பார்க்க முட்தோலுடன் கரடு முரடாக இருந்தாலும், தித்திக்கும் சுளைகளுடன், மயக்கும் மணத்துடன், சாப்பிடுபவர்களுக்கு பலன் தரும் கனி. மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரியது என்ற பெயர் பெற்றது. தமிழகம், கேரளாவில் அதிகமான அளவு விளைகின்றது.

சனி, 18 மே, 2013

ASTROLOGY - 43 : ருதுக்கள்.


ஒரு ஆண்டில் ருதுக்கள் மொத்தம் ஆறு ஆகும். அவையாவன : 
     1. வசந்த ருது, 2. கிரீஷ்ம ருது, 3. வருஷ ருது, 4. சரத் ருது, 5. ஹேமந்த ருது, 6. சிசிர ருது. 

சித்திரை மாதமும், வைகாசி மாதமும்                                           - வசந்த ருது.
ஆனி மாதமும், ஆடி மாதமும்                                                      - கிரீஷ்ம ருது.
ஆவணி மாதமும், புரட்டாசி மாதமும்                                           - வருஷ ருது.
ஐப்பசி மாதமும், கார்த்திகை மாதமும்                                               - சரத் ருது.
மார்கழி மாதமும், தை மாதமும்                                                - ஹேமந்த ருது.
மாசி மாதமும், பங்குனி மாதமும்                                                      - சிசிர ருது.

THIRUMANTIRAM - 77 ஐந்தொழிற் கூத்தைக் கூற வந்தேன்!


77.                        மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்       
                             நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு 
                             மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் 
                             சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.

வெள்ளி, 17 மே, 2013

Piles : மூல நோய்க்கு தீர்வில்லையா?


     சித்த மருத்துவத்தில் மூல மூளையின் அமைப்பு, வடிவம், நோயினுடைய இயல்பு இவற்றை அடிப்படையாக வைத்து 21 வகையாக பிரித்துள்ளனர்.

     அமில பித்த தொத்தமிலாது மூலம் வராது - என்பது சித்தர்கள் வாக்கு. மூலத்தை உள்மூலம், வெளிமூலம் என பொதுவாக இரண்டு வகையாக பிரிக்கலாம். மூலத்திற்கு முதல் காரணம் மலச்சிக்கல். உண்ணும் உணவு முறையை மாற்றி அமைத்துக் கொண்டாலே மூலம் வராது. மூல நோய் என்பது ஆசனவாயில் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் காணப்படும் சிறு இரத்தக் கட்டிகளாகும். ஒரே இடத்தில் உட்கார்ந்து மணிக்கணக்கில் வேலை செய்வதால் ஆசனவாயில் சூடு ஏற்படுகிறது. அது வெளியேறமுடியாமல் ஆசனவாயின் உட்புறத்தை தாக்குகிறது. இதனால் மூலத்தில் சூடு ஏற்பட்டு மூல நோய் உண்டாகிறது.

வியாழன், 16 மே, 2013

ASTROLOGY - 42 : அயனங்கள்.


     ஆண்டுகளுக்கு அடுத்து அயனங்கள். அவைகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

அயனங்கள் இருவகைப்படும். அவையாவன : 
                                       1. உத்தராயனம். 2. தட்சிணாயனம்.

புதன், 15 மே, 2013

THIRUMANTIRAM - 76 ஆராய்ச்சியால் உண்மையை உணர்ந்தேன்!


76.                        சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்       
                             மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்    
                             இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி  
                             உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால். 

திங்கள், 13 மே, 2013

ASTROLOGY - 41 : ஜோதிடம் - ஆண்டுகள் - ஸ்வரூபம்.


51.  பிங்கள ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பத்தொன்றாவது ஆண்டாகும்.
2. பிங்கள ஆண்டின் அதிதேவதை             : கிருஷ்ணன்
3. அதிதேவதையின் நிறம்                          : நீலம்       
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : சிவந்த முகம், சிவந்த கண்கள்,  
                                                                         வேப்பமரத்தடியில் இருப்பவர். 
5. பிங்கள ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
       பொன்னிறமான கண்கள், இகழத்தக்க செயல்புரிபவன், நிலையற்ற புகழ் பெற்றவன், கொடையாளி, மேன்மை பெற்றவன், பிறருக்கு தீங்கு செய்பவன், கொடூரமான சொற்களை உடையவன்.

ஞாயிறு, 12 மே, 2013

THIRUMANTIRAM - 75 சிதாகாயத்தில் பொருந்தியிருந்தேன்.


75.                        இருந்தவக் காரணங் கேளிந் திரனே       
                             பொருந்திய செல்வப் புவனா பதியாம்    
                             அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன் 
                             பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

செவ்வாய், 7 மே, 2013

வேளாளர் சமூகம் ஒரு பார்வை!


     அந்த இளைஞனைப் பார்த்து வெள்ளையர்கள் பயந்துதான் போனார்கள். அவனது அஞ்சா நெஞ்சுரமும் விடுதலை வேட்கையும் கண்டு பரங்கியர் நடுநடுங்கினார்கள். அவனோடு நேருக்குநேர் பேசியோ போரிட்டோ அவனை வெல்லமுடியாது என்று முடிவு கட்டிய வெள்ளையர்கள், அவனை சிறைப் பிடித்தவுடன் தூக்கிலிட்டார்கள். அப்போதும் ஆத்திரம் அடங்கவில்லை. அவன் தலையை வெட்டித் துண்டித்து ஈட்டியில் குத்தி காட்சிப் பொருளாக நடுச்சந்தியில் நட்டு வைத்தார்கள்.