செவ்வாய், 1 அக்டோபர், 2013

THIRUMANTIRAM - 86 : நூலைக் கற்கத் தக்கவர்.


86.                        பிறப்பு இலி நாதனை, பேர்நந்தி தன்னைச்            
                             சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி       
                             மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை 
                             உறைப்பொடும் கூடிநின்று ஓதலும் ஆமே.  

     பிறப்பு இறப்பு இல்லாத சிவபெருமானை, நந்தி என்ற திருப்பெயர் உடையவனை, சிறப்புடன் ஆகாயவாசிகள் கைகள் கூப்பித் தொழுது உள்ளத்துள் மறவாதவராய் மந்திரமான மாலையால் பத்தியுடன் பொருந்தியிருந்து ஓதவும் கூடும். 
   
     விளக்கம் : பிறப்பிலி - பிறவி இல்லாதவன். உறைப்பு - உறுதி. வழிப்பேறு - பதமுத்தி. ஓதுதல் - பாராயணம் செய்தல்.

1 கருத்து:

  1. திருமந்திரம் 97
    பிறப்பிலி நாதனை, பேர்நந்தி தன்னைச் சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
    மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை யுறைப்பொடும் கூடிநின்று ஓதலும் ஆமே.

    விளக்கம்:-
    பிறப்பிலி - பிறப்பும் இறப்பும் இல்லாதவன் இந்த உலகத்தை பேரண்டத்தைப் படைத்தவன்.

    அ)பிறப்பிலி நாதனை, பேர்நந்தி தன்னைச்:-
    இப்ப பிரபஞ்சத்தை படைத்தவன் நாதன், ஈசன். ஈசனின் அருளையும் தரிசனத்தையும் ஞானத்தையும் பெற முதலில் நந்தியின் அனுமதியுடன் மட்டுமே பெற முடியும் என்கிறார்

    ஆ)சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி :- இப்பூவுலகை விட்டு போனவர்கள் பலகோடிபேர் அதில் பதினெண் சித்தர்களும் ஈசனின் அருள் பெற்ற பல தவஞானிகளும் வானவர்கள் எனக் கூறப்படுகிறார்கள்.

    இ) மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை :- அவர்களால் ஈசனை மறக்காமல் நெஞ்சினுள்ளே வைத்து மந்திரமாலையாக தியானித்துக் கொண்டுள்ளார்கள்.

    ஈ)யுறைப்பொடும் கூடிநின்று ஓதலும்ஆமே.
    வானவர்கள் எப்பொழுதும் ஈசனை நினைத்து உறைந்து கூடி நின்று அவன் திருமந்திரத்தை ஓதிக்கொண்டு இருக்க வேண்டும் என்கிறார்.

    உட்கருத்து:- மானிடா இந்த உடலால் உனக்கு பயன் ஏதும் இல்லை. இளமையில் உடலின் பயன்களை அணுபவவித்த பின்னர், மூப்பு காலத்தில் ஆவது ஈசனை வழிபட்டால் அவன் உனக்கு வழி காட்டுவான் என்பதை யாவது உணர்ந்து கொள்.

    பதிலளிநீக்கு