வெள்ளி, 27 செப்டம்பர், 2013

THIRUMANTIRAM - 83 : திருமூலர் வந்தவழி.


83.                        செல்கின்ற வாற்றில் சிவன்முனி சித்தசன்           
                             வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்     
                             பல்கின்ற தேவ ரசுரர் நரர்தம்பால்      
                             ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.   

     திருக்கயிலாயத்தினின்று செல்லும் வழியில் சிவனை நினைந்து காமனை வெல்லும் ஞானம் மிக்க முனிவர் முப்பத்து முக்கோடி தேவர்கள் அசுரர் மானிடர் ஆகியவர் தம்மிடம் சூட்சுமமாக உள்ள விண்ணின் வழியாக நான் வந்தேன்.   
   
     விளக்கம் : இதில் திருமூலர் விண்வழியாய்க் கயிலாயத்தை விட்டுச் சிவத்தை நினைத்தபடி இங்கு வந்தேன் என்று கூறியுள்ளார். சித்தசன் - காமன். அவனை வெல்கின்ற ஞானமாவது காமத்தை வெல்லும் அறிவு. ஒல்குதல் - சுருங்குதல். பல்கின்ற - பலவாய்ப் பெருகிய.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக