செவ்வாய், 23 ஜூலை, 2013

The holy month of Aadi : தெய்வீகமான ஆடி மாதம்!


      பட்டி, தொட்டி எங்கும் பிரபலமான மாதம். முளைப்பாலிகை ஏந்திப் பெண்கள் ஊர்வலமாகப் போய்க் கொண்டாடும் மாதம். சீறிப் பாய்ந்து சுழன்றோடும் ஆற்றில் வாலிபர்கள் வாகாகப் பாய்ந்து கும்மாளம் போடும் மாதம். வேப்பிலை உடையணிந்து வினைகளைத் தீர்க்கப்பெறும் மாதம். வளையல்களை நொறுக்கி அம்பிகை தன்னை வெளிப்படுத்திய மாதம்.

ஞாயிறு, 21 ஜூலை, 2013

கல்விக் கடவுள்! அற்புத மனிதன்!


     சமீபத்தில் இரு வேறு அனுபவங்கள். முதல் நிகழ்வு ஓர் ஆன்மிகப் பெரியவர் நடத்திய கல்வி யாகம், வேள்வி, பூஜை, வழிபாடு. இரண்டாம் நிகழ்வு இன்னொரு பெரியவர் நடத்திய கல்வி உதவித் தொகை வழங்கும் திருவிழா, கல்வி யாகம், ஞான வேள்வி, அறிவுப் பூஜை, வழிபாடு. ஆன்மிக யாகம், அதற்கே உரித்தான அத்தனை அடையாளங்களோடும் பரபரப்போடும் ஆன்மிகத் தேடலோடும் நடந்தது.

THIRUMANTIRAM - 82 : திருவடியின் கீழ் இருந்தேன்!


82.                        ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு          
                             ஊனமி ல்ஒன்பது கோடி யுகந்தனுள்    
                             ஞானப்பா லாட்டி நாதனை யர்ச்சித்து    
                             நானு மிருந்தேன்நற் போதியின் கீழே.   

சனி, 20 ஜூலை, 2013

ASTROLOGY - 46 : பஞ்சாங்கம்


     பஞ்சாங்கம் எனும் சொல் எல்லோராலும் நன்கு அறியப்பட்டதே. இதன் பொருளை அறிந்தோ அறியாமலோ பலர் இச்சொல்லை உபயோகிக்கின்றனர். எடுத்துக்காட்டாக 'பழைய பஞ்சாங்கம்' 'அபத்த பஞ்சாங்கத்திற்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம்' என்றெல்லாம் கூறுவர். இச்சொல்லின் பொருள் என்ன?

THIRUMANTIRAM - 81 : தமிழ் செய்யுமாறு என்னைப் படைத்தான்!


81.                        பின்னை நின்று என்னே பிறவி பெறுவது?         
                             முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்;  
                             என்னை நன்றாக இறைவன் படைத்தனன்  
                             தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.  

வெள்ளி, 19 ஜூலை, 2013

Betel Leaf : வெற்றிலை ( பசும் தங்கம் )


     பசும் தங்கமா அப்படி ஓன்று இருக்கிறதா? அது எப்படி இருக்கும் என்று கேட்கிறீர்களா?  நம் வாழ்வில் கலந்த 'வெற்றிலை'தான் 'பசும் தங்கம்.' நம் ஊரில் திருமணங்கள் இது இல்லாமல் ஆரம்பிக்காது. இது கொடுக்காமல் முடிவடையாது. விருந்துகளுக்குப் போனால் கடைசியில் இதை போட்டால்தான் முழுதிருப்தி. பிரசவித்த பெண்ணை தினமும் இதை கட்டாயம் சாப்பிட சொல்லி வற்புறுத்துவார்கள்.

புதன், 17 ஜூலை, 2013

THIRUMANTIRAM - 80 : இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன்!


80.                        இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி;         
                             இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே;  
                             இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே; 
                             இருந்தேன் என் நந்தி இணையடிக் கீழே.  

ASTROLOGY - 45 : மாதங்கள்.


7. சோதிடவியலில் ஆசுவயுஜ மாதத்தின் தன்மை :

1. ஆசுவயுஜ மாத தேவதையின் நிறம்          : சிவப்பு   

2. ஆசுவயுஜ மாத தேவதையின் பெயர்         : இஷன்  

3. ஆசுவயுஜ மாத தேவதையின் வாகனம்    : சிறந்த கரடி   

4. ஆசுவயுஜ மாத தேவதையின் கைகள்       : பன்னிரெண்டு கைகள்