சனி, 20 அக்டோபர், 2012

Learn Computer Programming in Tamil : தமிழில் எளிய முறையில் புரோகிராமிங்!


     கம்ப்யூட்டரில் ப்ரோக்ராம்கள் எழுதுவது என்பது ஒரு கலை. அந்தக் கலையை மிகச்சிறப்பாக கற்றுக்கொடுப்பதற்கு ஆங்கிலத்தில் பல தளங்கள் உள்ளன. தமிழில் மிகவும் அரிதாகவே உள்ளன. அப்படியே படித்தாலும் நாம் அந்த பாடங்களைப் புரிந்து கொள்வது மிகவும் சிரமமானதாகவே உள்ளது.

     மாணவர்கள் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் சேர்ந்து ஆயிரக்கணக்கில் பணத்தைச் செலவு செய்தாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை. ஏனென்றால் அவர்கள் புத்தகத்தில் இருப்பதை ஒரு வரி மாறாமல் சொல்லித் தருகிறார்கள். அதுவும் ஆங்கிலத்தில். ஆங்கிலப் புலமை இல்லாதவர்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது. அனைவருக்கும் ஆங்கில அறிவு இல்லையா என்று கேட்கக்கூடாது. தயவு செய்து தவறாக  நினைக்கவேண்டாம். 


     கற்றுக் கொள்பவர்கள் திறமையாளர்கள்தான். ஆனாலும் படிப்பார்கள். படித்ததை செயல்படுத்த அவர்களால் முடியாது. ஒரு சர்டிபிகேட்டை தருகிறார்கள். இதனால் எந்த விதமான நன்மையையும் கிடையாது. அவர்களால் சாதாரணமான ஒரு கோடிங்கை கொடுத்து எழுது என்றால் திணறுவார்கள். இதற்கு ஒரே வழி ஒவ்வொருவரும் தத்தமது தாய்மொழியில் கம்ப்யூட்டர் தொடர்பான பாடங்களைப் படிக்க வேண்டும். 

     அடுத்த மொழியைப் படிக்க வேண்டாம் என்று கூறவில்லை. பிறமொழி அவசியம்தான். இந்தக் குறையைப் போக்குவதற்காகவே சிறந்த தளம் ஒன்று உள்ளது. உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் இந்த தளத்தைப் பார்த்துப் படித்துப் பயன்பெற வேண்டுகின்றேன். வாழ்வில் வளம்பெற வேண்டுகின்றேன். தளத்தின் பெயரே மிகவும் இனிப்பானது. கற்கண்டு.

தளத்தின் முகவரி : http://www.karkandu.com/

     இனி அத்தளத்தை வடிவமைத்தவரின் வார்த்தைககளிலேயே தளத்தைப் பற்றி ஒரு அறிமுகம் பார்ப்போம்.

     நிறைய மாணவர்கள் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட படிப்புகளை வெற்றிகரமாக படித்து நல்ல வேலையில் சேர்ந்து வாழ்வில் வெற்றிபெற வேணடும் என்ற கனவில் பள்ளியிலும், கல்லூரியிலும், கம்ப்யூட்டர் செண்டரிலும் நிறையவே மெனக்கெடுகிறார்கள். நிறைய காசு கொடுத்து படிக்கவும் செய்கிறார்கள். ஆனால் அவ்வாறு முயற்சி செய்யும் அனைவராலும் வாழ்வில் வெற்றிபெற முடிவதில்லை. 


     அவர்களுக்கு எவ்வாறு புரிய வைக்க வேண்டுமோ அந்த முறையில் நிறைய பேர் சொல்லித்தருவதில்லை என்பன போன்ற காரணங்கள் நிறைய இருக்கலாம். இதனால் பாதிக்கப்படுவது அந்த மாணவர்கள் தான். அதிலும் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து, தங்கள் குடும்பத்தில் எந்த ஒரு கம்ப்யூட்டர் படித்தவர்களின் பின்னணியும் இல்லாது வரும் மாணவர்கள் படும்பாடு சொல்லவே தேவையில்லை.


     இவர்கள் தேர்வுக்கு படிக்கும்போது என்னென்ன புரோகிராம்கள் கேட்கப்படும் எனற ஒரு லிஸ்டை வைத்துக்கொண்டு அதை மனப்பாடம் செய்து அதை அப்படியே எழுதுவார்கள். தேர்வில் அவ்வாறு எழுதும்போது ஏதாவது ஒரு வரியை மறந்துவிட்டாலோ அல்லது error வந்துவிட்டாலோ அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பரிதாபமாக முழித்து கொண்டிருப்பார்கள். இறுதியில் மார்க் வாங்காமல் கோட்டை விட்டுவிடுவார்கள். அடுத்து வேலை தேடுவது, இண்டர்வியு அட்டண்டு செய்வது போன்றவை இவர்களுக்கு கடினமானதாக இருக்கும்.


     ஆனால் சில மாணவர்கள் இருப்பார்கள் அவர்கள் எதையும் மனப்பாடம் செய்யமாட்டார்கள். தேர்வில் எந்த கேள்வி வந்திருந்தாலும் சிரமமில்லாமல் எழுதி நிறைய மார்க் எடுத்துவிடுவார்கள். இவர்களால் மட்டும் எப்படி அவ்வாறு வெற்றிபெற முடிகிறது? மற்றவர்களிடம் இல்லாத ஒன்று அப்படி என்ன இவர்களிடம் இருக்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாகவும், அனைத்து மாணவர்களும் புரோகிராமிங் செய்வதில் வெற்றிபெற தேவையான ஆலோசனைகளை வழங்கிடவும் இதை எழுதுகின்றேன்.


     புரோகிராம் எழுத ஆர்வம் இருக்கிறது ஆனால் எப்படி எழுதுவது எங்கிருந்து ஆரம்பிப்பது எனத்தெரியவில்லை என்று சொல்பவர்களுக்காகவும் இதை எழுதுகின்றேன். இத்தளத்தின் மூலம் அவர்களின் தேடுதல்களுக்கான சரியான தகவல்களை என்னால் இயன்றவரை கொடுக்க முயற்சிக்கிறேன். 

என்னென்ன எழுதப்போகிறேன்?

புரோகிராம் என்றால் என்ன?
லாஜிக்காக எப்படி யோசிப்பது?
சிறிய மற்றும் பெரிய புரோகிராமை எப்படி டிஸைன் செய்வது?
எப்படி புரோகிராம் எழுதுவது? 
எழுதிய புரோகிராமை எவ்வாறு டெஸ்ட் செய்வது?
டேட்டா பேஸ், டேபிள்களை எப்படி டிஸைன் செய்வது?

     உள்ளிட்ட பல கேள்விகளுக்கான விடைகளை மிகவும் எளிய நடையில் நிறைய உதாரணங்களோடு இந்த வலைப்பூவில் எழுதவிருக்கிறேன்.

வலைப்பூ : http://www.karkandu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக