வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

கலங்கும் ரம்பா!     பிரபல நடிகை ரம்பாவும் கனடா தொழிலதிபர் இந்திரனுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இப்போது இருவருக்கும் ஒன்றரை வயதில் லாவண்யா என்ற மகள் இருக்கிறாள்.

     இந்நிலையில் ரம்பாவும், இந்திரனும் விவாகரத்து செய்து கொண்டதாக தகவல் பரவியது. இதை அறிந்த நாம் ரம்பாவை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, நான், என் கணவர் இந்திரன், மகள் லாண்யாவுடன் கனடாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

     இன்று எனது கணவர் இந்திரனுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் நான், என் கணவர் இந்திரனை விவாகரத்து செய்துவிட்டதாக இணையதளம் மூலம் வதந்தியை பரப்பியிருக்கிறார்கள்.

     ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இப்படியெல்லாம் விளையாடக்கூடாது. இதுபற்றி நான், என் கணவரிடம் ஆதங்கத்துடன் பேசியபோது, அவர் எனக்கு தைரியம் சொன்னார். இது போன்ற வதந்திகளையெல்லாம் கண்டு கொள்ளாதே, அலட்சியப்படுத்திவிடு என்று கூறினார். எனக்கு நல்ல மனைவியும், அழகான குழந்தையும், செழிப்பான வியாபாரமும் இருக்கிறது.

     இதை விட ஒரு மனிதனுக்கு என்ன வேண்டும் என்று அவர் கேட்கிறார். நான் பயந்த சுபாமுள்ள பெண் அல்ல. வதந்திகளை பார்த்து கவலைப்படமாட்டேன். இருப்பினும், தமிழ்நாட்டில் உள்ள என் நலம் விரும்பிகளுக்காகவும், ரசிகர்களுக்காகவும் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்," என்று கூறியுள்ளார்.

2 கருத்துகள்: