திங்கள், 20 ஆகஸ்ட், 2012

த்ரிஷாவுக்கு திருமணம்?


     த்ரிஷாவும் ராணாவும் அடுத்தாண்டு திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்பது தான் தற்போதைய நெட் டாக். பிரபல பட அதிபர் டி. ராமாநாயுடுவின் பேரன் ராணா. தெலுங்கு, இந்தி என தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். தமிழில் அஜீத் - விஷ்ணுவர்தன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கும் அறிமுகமாகிறார்.

     ராணாவுடன் ஒரு தெலுங்கு படத்தில் ஜோடியாக த்ரிஷா நடித்தபோது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்பு அந்த நட்பு காதலாக மாறிவிட்டதாக செய்திகள் உலா வருகின்றன.


     சமீபத்தில் நடைபெற்ற அனைத்து திரையுலக நிகழ்ச்சிகளிளும் ராணாவுடன்தான் கலந்து கொள்கிறார் த்ர்ஷா. ராணாவின் தங்கை திருமணம் நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் ராணாவின் குடும்பதினர் மட்டுமே பங்கேற்று இருக்கிறார்கள். அதில் கலந்து கொண்ட ஒரு திரையுலக நட்சத்திரம் த்ரிஷா மட்டுமே.


     "இருவருமே காதல் வயப்பட்டு இருக்கிறார்கள். டிசம்பர் மாதம் ராணாவின் தங்கை திருமணம் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அடுத்தாண்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்." என பரபரப்பாக பேசப்பட்டது. 


     இந்நிலையில் இந்த செய்தி குறித்து த்ரிஷா தனது டிவிட்டர் இணையத்தில் " ஹா ஹா.. எல்லாவற்றையும் படித்தேன்.. நீங்கள் கேள்விப்படுவதையோ, படிப்பதையோ நம்பாதீர்கள்.. சம்பந்தப்பட்டவர்கள் சொல்லும்வரை காத்திருங்கள்.." என்று தெரிவித்து இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக