ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர்


     11 ஆஸ்கர்களை அள்ளிய 'டைட்டானிக்', உலகம் முழுவதும் ஹிட் அடித்த 'அவதார்' என வெற்றிக் கதைகளை தன் பாக்கெட்டில் நிரப்பியிருக்கும் இயக்குனர் கேமரூன், இந்த முறை பரபரப்பாக பேசப்படுவது கடலுக்கு அடியில் போய் வந்ததால்.

     கடலுக்கடியில் அவர் போன தூரம்.. அதிகமில்லை ஜென்டில்மென் 7 மைல் தான். அவருடன் துணைக்கு யாரையும் கூட்டிக்கொண்டு போகவில்லை. இதனால், 'உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர்' என்ற பெயரையும் தட்டிச் சென்றுள்ளார்.

     35,756 அடி ஆழத்திற்கு சென்று அங்கு சுமார் 3 மணி நேரம் இருந்திருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். தன் படத்திற்குத் தேவையான தகவல்களை சேகரிக்க, அங்கு கொஞ்சம் வீடியோவும், புகைப்படங்களும் எடுத்திருக்கிறார்.

     இந்த பயணத்திற்காக என்று ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட 'Deepsea Challenger'ல் ஆழ்கடல் ட்ரிப் போய் வந்த கேமரூனுக்கு வயது 57.

1 கருத்து:

  1. வணக்கம் ,
    உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
    நன்றி.
    www.thiraddu.com

    பதிலளிநீக்கு