வெள்ளி, 13 ஜூலை, 2012

கரூர் வைஸ்யா பேங்க் பண பரிவர்த்தனை ஒப்பந்தம்.


     சென்னை : கரூர் வைஸ்யா பேங்க், வெளிநாடு வாழ் இந்திய வாடிக்கையாளர்களின் வசதிக்காக, டைம்ஸ் ஆப் மணியுடன் பணப் பரிவர்த்தனை ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது.

     இது குறித்து, இவ்வங்கியின் சர்வதேச பிரிவு பொது மேலாளர் வி.பாஸ்கர் கூறியதாவது : வங்கியில் கணக்கு துவங்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களின் (என்.ஆர்.ஐ) எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

     எனவே, இவ்வகை வாடிக்கையாளர்களுக்கு, விரைவாகவும், பாதுகாப்பாகவும், டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றத்தை அளிக்கும் வகையில், டைம்ஸ் ஆப் மணியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

     இப்புதிய ஒப்பந்தத்தின் வாயிலாக, டாலர் முறையிலான பணப்பரிமாற்றம் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், அந்நாட்டு கரன்சிகள் வாயிலாகவே பணப்பரிமாற்றம் செய்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

     இதன் வாயிலாக, வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடு மேலும் அதிகரிக்கும். இவ்வாறு வி.பாஸ்கர் கூறினார்.

நன்றி : தினமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக