சனி, 21 ஜூலை, 2012

போதுமென்ற மனதைக் கொடு இறைவா!


     வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவும், கடைபிடிக்கவும் அரிய தகவல்களை நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் அரிய பொன்மொழிகளைத் தந்திருக்கிறார்கள். கேட்போமா!


* அல்லாஹ் மிகவும் கிருபையாளனாக இருக்கிறான். பிரார்த்தனை செய்யும் அடியார்களின் வேண்டுதலை, கைகளை வெறுங்கையாக விடுவதற்கு வெட்கப்படுகிறான்.

* அடியார்களின் மீது அல்லாஹ் மிகவும் கருணை உள்ளவன். நோயாளி ஒருவனை நீங்கள் தண்ணீரிலிருந்து காப்பாற்றுவது போல், அவன் அடியானைக் காப்பாற்றுகிறான்.

* மறைவாக இருப்பவருக்கு மறைவாக இருக்கும். ஒருவர் வேண்டுகின்ற துஆ பிரார்த்தனை போன்று, விரைவாக இறைவனால் ஒப்புக் கொள்ளக்கூடிய வேறு எந்த துஆ பிரார்த்தனையும் கிடையாது.

* தொழுகை நடத்தும் இமாமும், பாங்கு சொல்லும் முஅத்தினும் ஈமான் உள்ளவர் ஆவார்கள். யா அல்லாஹ்! இமாம்களை நல்லவர்களாக்குவாயாக. பாங்கு சொல்பவருக்கு மன்னிப்பை அருள்வாயாக.

* எவரிடம் மூன்று விசேஷங்கள் உள்ளனவோ, அவர் மீது இறைவன் தன்னுடைய கையை வைப்பார். அவை ஏழைகள் மீது இரக்கம் கொள்வது, பெற்றோர் மீது பாசம் வைப்பது, பணியாளருக்கு உதவி செய்வது.

* பிரார்த்தனையானது முஃமினுக்கு (நம்பிக்கையாளர்) ஆயுதமாகவும், மார்க்கத்திற்கு தூணாகவும் இருக்கும். வானங்கள் பூமி அனைத்திற்கும் பேரொளியாக இருக்கும்.

* எவர் ஒருவர் இறைவனிடத்தில் தேவையானதை கேட்கவில்லையோ, அவர் மீது இறைவன் கோபம் கொள்கிறான்.

* பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது. நற்செயல்களைத் தவிர எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது. ( திருநபி அவர்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்னை, சிக்கல், பயம் உண்டாகும் செயல் நேர்ந்து விட்டால், உடனே தொழுகையின் பக்கம் விரைந்து செல்வார்கள்)

* உங்களில் ஒருவர் அவசரப்படாதிருக்கும் வரை, அவருடைய துஆவை நிறைவு செய்யப்படும்.

* உள்ளத்தாலும், கண்களாலும் துன்பத்தை வெளிப்படுத்துவது இறைவனிடம் உள்ளதாகும். கையாலும், நாவினாலும் துன்பத்தைக் காட்டுவது ஷைத்தானின் செயலாகும்.

* ""யா அல்லாஹ்! பயன்படாத கல்வியை விட்டும், இறையச்சமில்லாத இதயத்தை விட்டும், எதையும் போதுமாக்கிக் கொள்ளாத இதயத்தை விட்டும், கேட்டும் ஏற்கப்படாத துஆவை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

* எவர் ஒருவர் துன்பத்திற்கு ஆளானவரை நெருங்கி (ஆறுதல்) மனமிரங்கி கூறினால், துன்பத்திற்கு ஆளான அவருடைய நன்மைக்குச் சமமான நன்மை அவருக்கும் கிடைக்கும்.

* எவர் ஒருவர் என்னிடம் கையேந்தி துஆ வேண்டுவதை விட்டு விட்டு, குர்ஆனை ஓதுவதிலும், திக்ரு (தொடர்ந்து கடவுளை வணங்குவது) செய்வதிலும் ஈடுபடுவாரோ, அவருக்கு என்னிடம் கையேந்தி துஆ கேட்பவருக்கு அளிப்பதை விட மேலானதைக் கொடுத்தருள்வேன்.

* என் உம்மத்தர்களில் (பின்பற்றுபவர்கள்) ஒருவரிடம் ஒரு பொற்காசு கேளுங்கள் கொடுக்கமாட்டான். ஒரு வெள்ளிக்காசு கேளுங்கள். அதுவும் கொடுக்கமாட்டான். ஒரு செம்புக்காசைக் கேளுங்கள். அதையும் கொடுப்பதற்குக் கூட மனம் சம்மதிக்காது. ஆனால், அல்லாஹ் இடத்தில் சொர்க்கத்தைக் கேட்டால் அதைக் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக