ஞாயிறு, 22 ஜூலை, 2012

குறைந்த விலையில் கையடக்க கணினி


     கையடக்க கணினி விற்பனையை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சென்னையில் துவக்கியுள்ளது. பி.எஸ்.என்.எல்., நிறுவனம் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், 'பான்டெல்' நிறுவனத்துடன் இணைந்து, குறைந்த விலையிலான கையடக்க கணினியை (டேப்லெட்) அறிமுகப்படுத்தியுள்ளது.

     வர்த்தக ரீதியிலான, இந்த 'டேப்லெட்' கணினி விற்பனையை, தமிழகம் மற்றும் சென்னை தொலைபேசி வட்டத்தின் தலைமை பொது மேலாளர்கள் அஷ்ரப் கான், சுப்ரமணியன் ஆகியோர் கூட்டாக அறிமுகப்படுத்தி, முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். 



     நவீன கையடக்க கணினிகள் குறித்து பொது மேலாளர்கள் கூறியதாவது : இரு மாதிரி, 'டேப்லெட்' கணினிகளும், மொபைல் போனை விட சற்று பெரிதாக, கையடக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதை எளிதில் எடுத்துச் செல்ல முடியும். 

     'லேப்-டாப்'பில் இடம் பெற்றிருக்கும் அனைத்து வசதிகளும் இதில் உள்ளன. இரு மாதிரிகளில், ஐ.எஸ்.70 ஐ.ஆர்.,ல், ஆண்ட்ராய்ட் 2.3 ஆபரேட்டிங் சிஸ்டம், 256 எம்.பி., ராம், ஒய்-பை, 3டி கேம்ஸ் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன. இதன் விலை 3,495 ரூபாய். ஐ.எஸ்.703 சி., யில், ஆண்ட்ராய்ட் 4.1 ஆபரேட்டிங் சிஸ்டம், 1 ஜி.பி., ராம், கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன; இதன் விலை 6,499 ரூபாய். 

     கையடக்க கணினியில், இணைய வசதியைப் பெற குறைந்த கட்டணத்தில், '2ஜி, 3ஜி' திட்டங்களை பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குறைந்த கட்டணத்தில், தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

     அனைத்து பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையங்களில், இந்த இரு மாதிரி கணினிகள் கிடைக்கும். மேலும், இரண்டு வாரத்திற்குள் பேசும் வசதியுடன் கூடிய கையடக்க கணினி, 10 ஆயிரம் ரூபாயில் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக