ஞாயிறு, 29 ஜூலை, 2012

புகை பிடிக்கும் காட்சி : கரீனாகபூருக்கு கண்டனம்.


     கரீனாகபூர் ஹீரோயின் என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். கதாநாயகிகள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. மதூர் பண்டார்கன் இயக்குகிறார். ரூ. 18 கோடி செலவில் இப்படம் தயாராகிறது. இதில் கரீனாகபூர் கவர்ச்சியாகவும் புகை பிடித்தும், மது அருந்துவது போன்ற காட்சியிலும் நடித்துள்ளார்.

     அவர் சிகரெட் பிடித்தபடி மது கோப்பையுடன் இருப்பது போன்ற போஸ்டர்கள் மும்பை நகரரெங்கும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. செப்டம்பரில்தான் படம் ரிலீசாகிறது. விளம்பரத்துக்காக முன்கூட்டியே இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். 

     ஏற்கனவே சில்க்ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தி தர்டி பிக்சர் படத்தில் வித்யாபாலன் படுகவர்ச்சியாக நடித்தார். படம் ரிலீசுக்கு முன் அவரது ஆபாச போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதற்கு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. 

     ஆனால் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அதில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. கவர்ச்சியாக நடித்தால் தனக்கும் விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கரீனாகபூர் ஆடை குறைப்பு செய்து மது, சிகரெட் என துணிச்சலாக நடித்துள்ளார். 

     இந்த போஸ்டர்களுக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. போஸ்டர்களும் கிழித்து எறியப்பட்டன. இதையடுத்து டிரெய்லரில் இருந்து புகை பிடிக்கும் காட்சி நீக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக