புதன், 18 ஜூலை, 2012

சுருட்டி வைக்கலாம் ஸ்மார்ட் போனை


     மொபைல் போனில் வளைக்க முடியாமல் இருப்பது அதன் திரை. உள்ளிருக்கும் டிஜிட்டல் போர்டுகளை எல்லாம் வளைக்கும் வகையில் வடிவமைக்கலாம். ஆனால் திரையை? கெட்டியாக, ஸ்கிராட்ச் விழாத வகையில் தற்போது ஸ்மார்ட் போன்களில் கொரில்லா கிளாஸ் என்ற வகை அமைக்கப்படுகிறது.

     இதனைத் தயாரிக்கும் கார்னிங் (Corning) என்னும் நிறுவனம் தற்போது வளைக்கக் கூடிய கிளாஸ் ஷீட்டினைத் தயாரித்துள்ளது. இதனை வில்லோ கிளாஸ் (Willow Glass) என அழைக்கிறது. இதன் பல்வேறு படிமங்களில், ஸ்மார்ட் போனுக்கான திரையில் இயங்கும் டிஜிட்டல் பொருட்கள் பதியவைக்கப்படுகின்றன. 

     குறிப்பாக டச் சென்சார் மற்றும் கலர் பில்டர்களை வளைக்கக் கூடிய வில்லோ கிளாஸில் அமைக்கின்றனர். பின் மற்ற தேவையான டிஜிட்டல் பொருட்களை வளைக்கும் விதத்தில் அமைத்து, ஒரு ஸ்மார்ட் போனைத் தயாரிக்கின்றனர். 

     வருங்காலத்தில், ஸ்மார்ட் போனை சுருட்டு போல சுருட்டி எடுத்துச் செல்லலாம் என்று கார்னிங் நிறுவனத்தில் வில்லோ கிளாஸ் திட்டப்பிரிவின் இயக்குநர் தீபக் சவுத்ரி தெரிவித்துள்ளார். சுருட்டாக சுருட்டி வைப்பதுடன் நிறுத்திக் கொண்டால் சரி. மறந்து போய் ஒரு முனையில் பற்ற வைத்திடக் கூடாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக