திங்கள், 2 ஜூலை, 2012

மாத விரதங்கள் : ஆடி மாதம்



* 10-8-12  அன்று ஆடி கிருத்திகை வருகிறது. அன்று வரும்  கிருத்திகைகளில் சிறப்புப் பெற்றது. அன்றைய தினம் பக்தர்கள் காவடி எடுத்து தமது பக்தியை செலுத்துவர், முருக பெருமானின் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது நலம்.
 
* ஆடி மாதம் 18-ம் நாள் (2-8-12) ஆடிப்பெருக்கு அந்நாட்களில் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் என்பர். காவிரி கரையோர கோவில்களில் புதுமணத் தம்பதியர் ஆற்றில் குளித்து விட்டு வழிபாடு செய்வர்.
 
*  ஆடி மாதம் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளும் அம்மனுக்கு உகந்தவை. ஆடி மாதம் அனைத்தும் வெள்ளிக்கிழமைகளிலும் அம்பாள் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும். ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மன் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும்.
 
*   ஆடி மாதம் 27-7-12  அன்று வரலட்சுமி விரதம் வருகிறது. இந்த விரதம் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படும் விரதமாகும். கிருஷ்ணபட்சம் சதுர்த்தி கூடிய வெள்ளிக் கிழமைகளில் வருகிறது. பெண்கள் உபவாசமிருந்து நோன்பிருந்தால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவர்.
 
*  ஆடி மாதம் 18-7-12  அன்று ஆடி அமாவாசை வருகிறது. மாதம்தோறும் வரும் அமாவாசைகளை விட ஆடி மாதம் வரும் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் புண்ணிய நதிகளில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்தல் சிறப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக