ஞாயிறு, 22 ஜூலை, 2012

விக்லீக்கின் வாமி ப்ளஸ் 7 ஆன்ட்ராய்டு டேப்லெட்


     விக்லீக் நிறுவனம் ஒரு புதிய வாமி ப்ளஸ் 7 என்னும் ஆன்ட்ராய்ட் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த ப்ளஸ் 7 டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குவதால் இதை ஒரு நவீன் டேப்லெட் என்று கருதலாம்.

     7 இன்ச் அளவில் கப்பாசிட்டிவ் மல்டி டச் திரை கொண்டு வரும் இந்த டேப்லெட் 1.2 ஜிஹெர்ட்ஸ் சிபியி மற்றும் 512 ஜிபி ரேம் ஆகியவற்றுடன் வருகிறது. அதனால் இது ஒரு உறுதியான டேப்லெட் ஆகும். இதன் வேகமும் அதிகமாகவே இருக்கும்.

     இந்த டேப்லெட் 4ஜிபி இன்டர்னல் மெமரி, 32 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு, வைபை மற்றும் 3ஜி இன்டர்நெட் ஆகிய இணைப்பு வசதிகளையும் இந்த டேப்லெட் கொண்டிருக்கிறது. இரண்டு பக்கங்களிலும் கேமராக்கள் இருப்பதால் போட்டோ எடுப்பதற்கும் மற்றும் வீடியோ உரையாடல் செய்யவும் இந்த டேப்லெட் உதவும். 

     இந்த டேப்லெட் 1080பி வீடியோவை சப்போர்ட் செய்யும் வசதி கொண்டது. மேலும் பல ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களை இந்த டேப்லெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

     இதன் லயன் பேட்டரி இந்த டேப்லெட்டுக்கு 5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இந்த ப்ளஸ் 7 டேப்லெட் ரூ.11,500க்கு விற்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக