புதன், 4 ஜூலை, 2012

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி : பார்லி., கூட்டுக் குழு சாட்சிகள் பட்டியலில் வாஜ்பாய், சிதம்பரம்



     2 ஜி  ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி குறித்து விசாரிக்கும் பார்லிமென்ட் கூட்டு குழுமுன், நேற்று சாட்சிகளாக அழைத்து விசாரிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் முன்வைக்கப்பட்டது.அதில், வாஜ்பாய், சிதம்பரம் உட்பட பலரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இருந்தாலும், அவர்களை அழைப்பதா, வேண்டாமா என்பதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

     2ஜி  ஸ்பெக்ட்ரம் மோசடிகுறித்து விசாரிக்க, நியமிக்கப்பட்ட பி.சி. சாக்கோ தலைமையிலான பார்லிமென்ட் கூட்டுக் குழு கூட்டம்,நேற்று நடைபெற்றது. அப்போது,சாட்சிகளாக யார், யாரை அழைத்துவிசாரிக்கலாம் என்பது தொடர்பாக, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தயோசனை அடிப்படையில், தயாரிக்கப்பட்ட நபர்களின் பட்டியல் ஒன்றை முன்வைத்தார். இதில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், தொலை தொடர்பு துறை முன்னாள் அமைச்சர்கள் ராஜா, ஜக்மோகன், அருண்ஷோரி, சுஷ்மா சுவராஜ்உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

     விசாரணை சாக்கோ கூறுகையில், "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், யாரை எல்லாம்அழைத்து, சாட்சியாக விசாரிக்கவேண்டும் என்பது பற்றி முடிவுசெய்யவில்லை. இதுபற்றி குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் ஆலோசிக்க வேண்டும். அப்போதுதான், சாட்சியாக யாரை எல்லாம் அழைக்க வேண்டும் என்பதுபற்றி ஒரு முடிவுக்கு வரமுடியும்'என்றார்.

     அப்போது, சாட்சிகள் பெயரில்,வாஜ்பாய் பெயர் இடம்பெற்றிருந்ததற்கு, குழுவில் இடம் பெற்றுள்ள பா.ஜ.,வை சேர்ந்த யஷ்வந்த் சின்கா கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.  "வாஜ்பாய் அழைக்கப்படும் பட்சத்தில், பிரதமர் என்ற முறையில், மன்மோகன் சிங்கும் விசாரணைக்கு அழைக்கப்பட வேண்டும்' என்றார்.

நன்றி : தினமல்ர்

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக