செவ்வாய், 31 ஜூலை, 2012

மறப்போம், மன்னிப்போம்!


     மறப்போம், மன்னிப்போம் என்று தாராள மனது காட்டும் மனிதர்களின் இதயம் பலமாகும். நோய் நொடி கிட்டே வராது என்று புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவினர், மனதுக்கும் இதயம் மற்றும் ஒட்டுமொத்த உடல்நலனுக்கும் உள்ள தொடர்பு பற்றி விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

படங்களில் மது புகை பிடிக்கும் காட்சிக்கு கட்டுப்பாடு : திரைப்பட தணிக்கை குழு அறிவிப்பு


     திரைப்படங்களில் சமீப காலமாக மது, மற்றும் புகை பிடிக்கும் காட்சிகள் பெருகி வருகின்றன. மதுபான சீன்களையும் அதிகம் வைக்கிறார்கள். மதுக்கடை பார்களில் பாடல் காட்சிகள் வைத்தும் எடுக்கிறார்கள்.

அடுக்குமாடி கட்டட அடிப்படை வசதி கட்டணம் அதிகரிப்பு : சதுர மீட்டருக்கு ரூ.250 கூடுதல் செலவாகும்



     தமிழகத்தில், நகர்ப்புற பகுதிகளில், புதிய கட்டடங்களுக்கான உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி கட்டணங்கள், 50 சதவீத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, புதிதாக அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் போது, சதுர மீட்டருக்கு, 250 ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படும்.

ஞாயிறு, 29 ஜூலை, 2012

ஐ.நா குழுவை அனுமதிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை.


     ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகள் குழுவை சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க மறுத்தால், ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை அடுத்த கட்டமாக கடும் நடவடிக்கைகளில் இறங்கக் கூடும் என்று ஜெனிவா தகவல்கள தெரிவிக்கின்றன.

புகை பிடிக்கும் காட்சி : கரீனாகபூருக்கு கண்டனம்.


     கரீனாகபூர் ஹீரோயின் என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். கதாநாயகிகள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. மதூர் பண்டார்கன் இயக்குகிறார். ரூ. 18 கோடி செலவில் இப்படம் தயாராகிறது. இதில் கரீனாகபூர் கவர்ச்சியாகவும் புகை பிடித்தும், மது அருந்துவது போன்ற காட்சியிலும் நடித்துள்ளார்.

பழைய நடிகை ஸ்ரீதேவியுடன் நடிக்க அஜீத்துக்கு அழைப்பு.


     தமிழில் நம்பர் ஒன் கதாநாயகியாக இருந்து இந்திப் படங்களிலும் கலக்கியவர் ஸ்ரீதேவி. 1970 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக இருந்தார். பின்னர் இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

சனி, 28 ஜூலை, 2012

புகைப்படங்களைத் தரவிறக்கம் செய்பவரா?


     இன்டர்நெட் தளங்களில் உலா வருகையில் சில படங்களைப் பார்த்து அவற்றை உங்கள்  பவர் பாய்ண்ட் பிரசன்டேஷனில் பயன்படுத்த எண்ணினால் உடனே அப்படியே காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் பேஸ்ட் செய்திட வேண்டாம். 

     அதற்குப் பதிலாக காப்பி செய்த படத்தை ஒரு பிக்சர் சாப்ட்வேரில் (பெயிண்ட், அடோப் போட்டோஷாப்) பேஸ்ட் செய்து அதனை உங்கள் வசதிக்கேற்ற பார்மட்டிற்கு மாற்றி பின் Insert, Picture, From File என்ற கட்டளைகளைக் கொடுத்து படத்தை அமைத்திடுங்கள். 

     நேரடியாக இன்டர் நெட்டில் காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் ஸ்லைடில் பேஸ்ட் செய்தால் பின் ஒவ்வொரு முறை அந்த ஸ்லைடிற்குச் செல்லும்போதெல்லாம் கம்ப்யூட்டர் உடனே இணையத்தைத் தொடர்பு கொள்ள துடிக்கும். மேலும் இந்த படத்தை நீக்க வேண்டும் என திட்டமிட்டால் அதனை நீக்குவதும் பெரும்பாடு படவேண்டும். வேர்த்து வியர்த்து போய்விடும்.

பிளாஸ்டிக் இல்லாமல் வாழ முடியாதா?


     பிளாஸ்டிக் நம் கண் முன்னே வாழும் எமன். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, மனித உயிர்களுக்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள, பேரழிவு சக்தி. உலகம் முழுவதும், சராசரியாக ஒரு ஆண்டுக்கு, 105 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள் தயாரிக்கப்படுகின்றன. உலகில் உள்ள ஒவ்வொரு நபரும், சராசரியாக ஒரு ஆண்டுக்கு, 70 கிலோ அளவுள்ள பிளாஸ்டிக்குளை பயன்படுத்துகின்றனர்.

வெள்ளி, 27 ஜூலை, 2012

பெருமாளை சுற்றி வருவதால் கிடைக்கும் பலன்.


     நட்சத்திர சத்ரயாகம் நடந்து முடிந்ததும், தம் ஆசனத்தில் அமர்ந்தார் சூதபுராணிகர். அவரைச் சுற்றி வந்தமர்ந்தனர் பல முனிவர்கள். அவர்களில் ஒரு முனிவர், 'பாவ ஜென்மமான நாய், வைகுந்த பதவி அடைய முடியுமா?' என்று சூதபுராணிகரிடம் கேட்டார்.

கத்ரினாவை விட்டால் ஆள் இல்லையா?


     பிரபலமான பேஷன் பத்திரிகைகள், உலகிலேயே அழகான உதடுகளை கொண்ட பெண் யார், உலகின் கவர்ச்சியான பெண் யார் என்பது குறித்து ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை பரபரப்பாக வெளியிடுகின்றன.

தாயின் காலடியே சொர்க்கம்!!



     அலீமக்தூம் மஹாயிமீ என்ற மகான் சிறுவராக இருந்த காலத்தில், ஒரு இரவில் அவருடைய தாயார், "மகனே! எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா,'' என்றார். மஹாயிமீ தண்ணீர் கோப்பையை நன்றாகக் கழுவி, தண்ணீர் முகரச் சென்ற போது, குடத்தில் தண்ணீர் இல்லை. எனவே, ஒரு கிணற்றுக்குப் போனார். அங்கிருந்து தண்ணீர் கொண்டு வந்தார்.

வியாழன், 26 ஜூலை, 2012

ஜோதிடம் - அறிமுகம் 7


குரு :

     இக்கோள் சூரியனுக்கு ஐந்தாவது வட்டத்தில் உள்ளது. சூரியனுக்கு சுமார் 48,00,00,030 மைல்களுக்கப்பால் இருந்து கொண்டு பன்னிரெண்டு ஆண்டுகளில் சூரியனைச் சுற்றி வருகிறது. இது தன்னைத் தானே சுற்றி வர 9 மணி 55 நிமிடங்களாகும். இதன் குறுக்களவு சுமார் 56,500 மைல்களாகும்.

புதன், 25 ஜூலை, 2012

சீன பெண்ணுக்கு கட்டாய கருக்கலைப்பு.


     மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ள முயன்ற, சீன பெண்ணுக்கு எட்டாவது மாதத்தில், சீன அதிகாரிகளால் கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.

குழந்தையை வீசி சென்ற கல் நெஞ்சக்காரி யார்?


     கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் நிலைய வளாகத்தில் திருப்பூர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பொது கழிப்பிடம் அருகில் கேட்பாரற்று அனாதையாக, மரக்கட்டை கைப்பிடியால் ஆன ஒரு பை கிடந்தது.

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


     சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 7-50 மணிக்கு கோமதி அம்மன் சன்னதி முன்புள்ள தங்ககொடிமரத்தில் மீனாட்சி சுந்தர் பட்டரால் கொடியேற்றப்பட்டு, கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.

ஒபாமா அரசில் மேலும் ஒரு அமெரிக்க இந்தியர் நியமனம்.


     அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது தலைமையிலான அரசில் புதிய நிர்வாக அதிகாரிகளை நியமித்துள்ளார். அதில் ஒருவர் அமெரிக்க இந்தியரான ராணி ராமசாமி. இவருக்கு கலைகளுக்கான தேசிய கவுன்சிலில் முக்கிய உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா : கொடியேற்றம் வருகிற 26-ந் தேதி நடக்கிறது


     தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. இது குறித்து தூத்துக்குடி பனிமயமாதா ஆலய பங்குதந்தை வில்லியம் சந்தானம் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- 

புதுவாழ்வு திட்டத்தின் மூலம் பெண்கள் குழுக்களுக்கு தொழில் அமைக்க பயிற்சி : கலெக்டர் ராஜாராமன் தகவல்


     சிவகங்கை மாவட்ட புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் ஊராட்சிகளுக்கு கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க நிதி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜாராமன் பேசியதாவது :- 

2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை.


     வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்பேரில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி. த. செல்லப்பாண்டியன் தலைமையில் நடந்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து 2008, 2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு முறை புதுப்பித்து கொள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு 150 கேள்விகளுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியீடு.


     ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த 12-ந்தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. இந்த தேர்வை 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் எழுதினார்கள். காலையில் தாள்-1, பிற்பகல் தாள்-2 தேர்வுகள் நடைபெற்றன. இரண்டு தேர்வுகளிலும் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூறினார்கள்.

ஆண்களோடு வாழமுடியாது என்ற நடிகை சோனா திடீர் மனமாற்றம் : திருமணத்துக்கு தயாராகிறார்.


     கவர்ச்சி நடிகை சோனா திருமணத்துக்கு தயாராகிறார். ஏற்கனவே கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து இருந்தார். ஆண்களோடு வாழமுடியாது. அவர்கள் நம்பிக்கையானவர்கள் அல்ல என்றெல்லாம் சாடி இருந்தார்.

படவிழாவில் நடிகை சாரா மீது கல்வீச்சு : உதடு கிழிந்தது


     முன்னாள் இந்திய அழகியும், நடிகையுமான சாரா ஜேன் தியாஸ் பரிதாபாத்தில் நடந்த படவிழாவின்போது மர்ம நபர் ஒருவர் கல்வீசி தாக்கினார். இதில் அவரது உதடு கிழிந்தது.

செவ்வாய், 24 ஜூலை, 2012

தெய்வம் வாழும் ஆலயம்.


     இளைஞன் ஒருவன், மெக்கானிக் கடை ஒன்றில் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வந்தான். அன்று, ஒரு காரின் இன்ஜினைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்தான். அப்போது, அந்த ஊரின் பிரபலமான இதய சிகிச்சை நிபுணர் ஒருவர்  தனது காரை செப்பனிடுவதற்காக அங்கு வந்தார்.

தூங்காமல அவதிப் படுகிறீர்களா!


     இரவுத் தூக்கம் நிம்மதியாக இருந்தால் உடலில் வேறெந்த பெரிய நோயும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். தூக்கமின்மையை சாதாரணமாகக் கருதி கண்டுகொள்ளாமல் விடுவது தவறு. சிறு வயதினருக்கு தேர்வு பயம், தலைவலி உள்ளிட்ட சிறிய தொந்தரவுகளினால்கூட தூக்கம் தடைபடலாம். அது விரைவில் சரியாகி விடும்.

TNPSC, VAO தேர்வுகளை தேர்வு மையங்களில் எதிர்கொள்வது எப்படி?


     தேர்வு மையங்களில் தேர்வு தொடங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு 30 நிமிடங்கள் முன்னதாக தேர்வுக்கூடத்தில் தங்களது இருக்கையில் அமர வேண்டும். தேர்வு தொடங்கி 30 நிமிடங்கள் கழித்து வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே தேர்வு மையத்திற்கு தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே சென்று விடுவது நல்லது. இதன் மூலம் கடைசி நேர பரபரப்பைத் தவிர்க்கலாம்.

திங்கள், 23 ஜூலை, 2012

சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் மருந்துகள்!


     கருவுற்ற தாய் உட்கொள்ளும் மாத்திரைகள், கருவின் வளர்ச்சிக்குப் பிராணவாயுவும் மற்ற பிற சத்துக்களும் செல்லக்கூடிய நஞ்சுக்கொடி வழியாகவே செல்லும். எனவே, கருவுற்ற தாய் உட்கொள்ளும் மருந்துகள், மாத்திரைகள் கருவை பலவிதங்களில் பாதிக்கும்.

திராட்சை பழ சிகரெட்டுகள்!


     அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் திராட்சை பழ விதைகளை கொண்டு, புதிய வகை சிகரெட் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர்.

அறிவியல் கணக்கும், ஆன்மீகக் கணக்கும்!


     பிரபல ஈழ எழுத்தாளர் அ. முத்துலிங்கம், தான் அடிக்கடி காணாமல் போவதைப் பற்றி ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார். சிறு வயசில் அவரது அம்மா, அவர் கையில் காசைக் கொடுத்து கடைக்கு அனுப்புவாராம்.

ஆஸ்திரியா கோட்டையில் அதிசயம் : 500 ஆண்டுகளுக்கு முன்பே புழக்கத்தில் இருந்த உள்ளாடை


     பெண்களின் உள்ளாடைகள் 500 ஆண்டுகளுக்கு முன்பே புழக்கத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது. ஆஸ்திரியா கோட்டையில் பை நிறைய பெண் உள்ளாடைகள், கிழிந்த ஆடைகள் கிடைத்துள்ளன.

ஹுக்கா புகைக்கும் கல்லூரி மாணவிகள்!


     அமெரிக்க கல்லூரி மாணவிகள் ஹுக்கா புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பல நாடுகளில் பெண்கள் சிகரெட் புகைப்பது அதிகரித்து விட்டது. ஆனால், அமெரிக்க கல்லூரி மாணவிகளிடம் சிகரெட்டை விட ஹுக்கா புகைப்பது பாதுகாப்பானது என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

நாய்க்கு பிறந்த பூனை!



     நாய்க்கு பூனை பிறக்குமா? வடகொரியாவில் ஒருவர் செல்லமாக வளர்த்த நாய்க்கு பூனை பிறந்திருக்கிறது. ஆனால், அதற்கு சாத்தியமே இல்லை. அது  நாய்க்குட்டி தான் என்று கால்நடைதுறை டாக்டர்கள் மறுத்துள்ளனர்.

முளைப்பயறு கோசுமல்லி.



முளைக்கட்டிய முழு பச்சைப்பயறு - 1 கப், 

துருவிய வெள்ளரிக்காய்      -      1 டேபிள் ஸ்பூன், 

துருவிய கேரட், மாங்காய்   -       1 கப், 

தேங்காய்த்துருவல்               -       அரை மூடி,

உடல், மனம், ஆரோக்கியம் - மனீஷா கொய்ராலா


     குடும்ப பிரச்னையில் சிக்கிய மனீஷா கொய்ராலா, ஆன்மீகத்தில் மூழ்கியதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வன், இந்தியன், பாபா என பல்வேறு தமிழ் மற்றும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்திருப்பவர் மனீஷா கொய்ராலா.

செக்ஸ் பொம்மையால் சீன போலீசார் அதிர்ச்சி!


     ஆற்றில் மிதந்து வந்த பெண் உடலை பார்த்து சீன போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அதை மீட்ட போது செக்ஸ் பொம்மை என்று தெரிந்தது.

கர்ப்பிணியா? செல் பேசாதீங்க!


     குழந்தைகள் நலனுக்கும், மொபைல்போனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் கர்ப்பிணி பெண்கள் செல்போன் உபயோகித்தால் குழந்தைகளில் நடத்தையில் மாற்றம் ஏற்படும் என்று தற்போதைய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் முரடர்களாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகள் செல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஞாயிறு, 22 ஜூலை, 2012

குறைந்த விலையில் கையடக்க கணினி


     கையடக்க கணினி விற்பனையை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சென்னையில் துவக்கியுள்ளது. பி.எஸ்.என்.எல்., நிறுவனம் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், 'பான்டெல்' நிறுவனத்துடன் இணைந்து, குறைந்த விலையிலான கையடக்க கணினியை (டேப்லெட்) அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுளின் நெக்சஸ்-7 டேப்லட்


     கூகுள் நிறுவனம் தனது முதல் டேப்லட்டான நெக்சஸ்-7னை அறிமுகப்படுத்த உள்ளது. கூகுள் ஐஓ கண்காட்சியில் அறிமுகமான இந்த நெக்சஸ்-7 டேப்லட் புதிய ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது.

சூழ்நிலையை தன் வசமாக்கு!


     ஜெபம் செய்கிற வேளையில் அங்கேயும், இங்கேயும் நடக்கிற விஷயங்களைக் கவனிப்பதே சிலருக்கு வாடிக்கையாக இருக்கும். ஆனால், இந்த சம்பவத்தைப் படிப்பவர்கள், இனி அவ்வாறு செய்யமாட்டார்கள்.

ஹேக்கர்கள்


     ஜிமெயில், குரோம் பிரவுசர், யுட்யூப், கூகுளின் தேடல் சாதனம் என கூகுள் சாதனத்தைப் பயன்படுத்தி இணையத்தில் உலா வருகையில், நாம் பார்க்க விரும்பும் இணைய தளத்தில் நம்மை செயல் இழக்கச் செய்திடும், அல்லது மோசமான விளைவுகளைத் தரும் புரோகிராம்கள் கொண்ட இணைய தளங்கள் இருப்பின், உடனே அது குறித்து எச்சரிக்கை ஒன்றை கூகுள் தருகிறது. குறிப்பிட்ட தளத்தினைத் திறக்காமல் நம்மைக் காப்பாற்றுகிறது.

6 (ஆறு)





     படத்தின் தலைப்பையே ஒரு குறியீடாக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் ஷாம் நடிக்கும் புதிய படத்திற்கு. ஆறு என்ற எண் வடிவிலான எரியும் மெழுகுவர்த்திதான் அந்த படத்தின் தலைப்பு. இந்த தலைப்பின் அருகே ஆறு மெழுகுவர்த்திகள் அல்லது சிக்ஸ் கேன்டில்ஸ் என்ற எந்த சப் டைட்டிலும் இடம்பெறாதாம்.

முத்தக்காட்சியில் இனியா.


     தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் அம்மாவின் கைப்பேசி படத்தில் நாயகன் சாந்தனுவுக்கு, நாயகி இனியா முத்தம் கொடுப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெறுகிறது. இந்த காட்சியில் சாந்தனுவுக்கு முத்தம் கொடுத்த அனுபவம் பற்றி இனியா பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

ரீ-மேக்காகும் தில்லு முல்லு! ரஜினி வேடத்தில் சிவா!!


     ரஜினி காமெடியில் கலக்கி, சூப்பர் ஹிட்டான தில்லு முல்லு படம் இப்போது ரீ-மேக் ஆக இருக்கிறது. இதில் ரஜினி நடித்த வேடத்தில் சிவா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தபால் துறையில் புதிய வசதி 40 கிலோ வரை பார்சல் அனுப்பலாம்!


     திருப்பூரில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலம் 40 கிலோ எடையுள்ள பொருட்களை "பார்சல்" சர்வீஸ் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பலாம். இதேபோல், வெளிநாடுகளுக்கும் அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெற்றோரை புறக்கணிப்பதால் கோர்ட்டுகளை நாடும் பரிதாபம்.



     பெற்றோரை புறக்கணிப்பதால், அவர்கள் வாழ்க்கை நடத்த வழியின்றி, கோர்ட்டுகளை நாடும் அவலம் உள்ளது. அவர்களை கண்களின் இமைகள் போல் பாதுகாக்க வேண்டும்,'' என, சென்னை ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா பேசினார்.

குழந்தைகள் என்றால் எனக்கு மட்டுமல்ல என் கேமிராவிற்கும் பிரியம் அதிகம் - ராமலட்சுமி


     திருநெல்வேலியில் பிறந்தவர். பெங்களூரில் வசித்து வருபவர். 17 வயதில் ஆர்வ மிகுதியால் வீட்டிலிருந்த கேமிராவில் படமெடுக்கப் பழகியவர். மெதுவாக ஆனால் படிப்படியாக போட்டோகிராபி பற்றி நிறைய தெரிந்து கொண்டிருப்பவர்.

விக்லீக்கின் வாமி ப்ளஸ் 7 ஆன்ட்ராய்டு டேப்லெட்


     விக்லீக் நிறுவனம் ஒரு புதிய வாமி ப்ளஸ் 7 என்னும் ஆன்ட்ராய்ட் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த ப்ளஸ் 7 டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குவதால் இதை ஒரு நவீன் டேப்லெட் என்று கருதலாம்.

சனி, 21 ஜூலை, 2012

போதுமென்ற மனதைக் கொடு இறைவா!


     வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவும், கடைபிடிக்கவும் அரிய தகவல்களை நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் அரிய பொன்மொழிகளைத் தந்திருக்கிறார்கள். கேட்போமா!

கருமுட்டை பரிசோதனை குழந்தையை பாதிக்காது : ஆய்வில் தகவல்.


     செயற்கைமுறை கருத்தரிப்பின்போது சினையுற்ற கருமுட்டை செல்லை பிரித்தெடுத்து பரிசோதிப்பதால், அந்த கருமுட்டையின் எஞ்சிய செல்களிலிருந்து பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பில்லை என்று ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

சீன ஆற்றில் மனிதனை தின்னும் மீன் தாக்கியதால் மக்கள் பீதி.


     பீஜிங் : மனிதனை தின்னும் மீனை உயிருடனோ சாகடித்தோ பிடித்துக் கொண்டு வந்தால் பரிசு அளிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவின் குவாங்ஸி மாகாணத்தில் உள்ளது லியுஜியாங் ஆறு. இங்கு மனிதனை தின்னும் மீன்கள் (பிரானா) இருப்பது தெரிய வந்துளது.

தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படமான ‘மூகமூடி’ ஆகஸ்ட் 31-ல் வெளியீடு


     யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழில் முதல் சூப்பர் ஹீரோ படமான ‘முகமூடி’ திரைப்படத்தின் இசை வெளியீடு இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.