புதன், 13 ஜூன், 2012

செய்திகள்

     மத்திய அரசின் வேலை நிர்வகிப்பதுதான், 
வியாபாரம் செய்வது அல்ல: மோடி எச்சரிக்கை.
     
     குஜராத் மாநிலத்தில் முதலீடு மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிறுவனங்களின் மீது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு நிறுவனங்களை ஏவி மிரட்டும் வேலையை செய்கிறது. குறிப்பாக எனக்கு நெருக்கமான முதலீட்டாளர்கள் அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றனர்.

     இதுபோன்ற செயல்களை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். நடக்கும் விஷயங்களை பிரதமர் ஏற்றுக்கொண்டால் அவர் பதில் சொல்ல முடியும். பிரச்சனை என்னவென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதில் அவருக்கே நம்பிக்கை இல்லாததுதான்.

பொக்கிஷ தேசம்!

     கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளா, பொக்கிஷ தேசமாக மாறிக் கொண்டிருக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பாதாள அறைகளில் விலை மதிப்பில்லாத பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இதே வகையில் தற்போது புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது திருச்சூர் மாவட்டம் திருவில்வாமலாவில் உள்ள ஸ்ரீ வில்வத்ரிநாதர் கோயில். இக்கோயில் 600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என சில குறிப்புகள் உள்ளனவாம். 

     சில கர்ணபரம்பரைக் கதைகளில் இக்கோயில் பாதாள அறையில் ஸ்ரீ ராமரின் தங்க வில் மற்றும் விலை மதிப்பிட முடியாத பொக்கிஷங்கள் உள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது.

     நித்யானந்தாவிற்கு தெரியாது சொக்கநாதர் திருவிளையாடல்கள். மதுரையில் ஆட்டம் போட்டார். ஒரு பிரம்மச்சாரி அமர வேண்டிய ஆசனத்தில் அமர்ந்தார். சொக்கநாதர் மீனாட்சி கோவிலை மீட்பேன் என்றார்.ஆனால் சொக்கநாதர் அவருடைய ஆட்டத்தையே நிறுத்தி விட்டார். மதுரை ஆதீனத்திற்கும் சொக்கநாதர் தற்போது கண் மூடிவிட்டார்.


ஊட்டியில் பருவமழை தொடங்கியது. நடுங்குகிறது ஊட்டி.


சில்மிஷ ஆசிரியர்களுக்கு 'செக்' கல்வித்துறை உத்தரவு.
     தவறான நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு கடும் தண்டனையான அதாவது கட்டாய ஓய்வு, பணி நீக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.


     கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் இரண்டு ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடைபெறாததால் பக்தர்கள் விரக்தி.


     தலைமை தேர்தல் கமிஷனராக தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வி. எஸ். சம்பத் பதவி ஏற்றுக்கொண்டார்.


காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம்.


     பஞ்சாப்பில் லாட்ஜ் அறையில் அழகியுடன் சிக்கிய காங்கிரஸ் தலைவர் மல்கித் சிங்கை போலீசார் விபச்சார வழக்கில் கைது செய்தனர்.


நித்தியானந்தாவிடம் புலித்தோல், டிஜிபி, கமிஷனருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்


அன்றாட பயன்பாட்டு பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்தது.


300 பைலட்கள் அதிரடி டிஸ்மிஸ் ஏர்இந்தியா நிறுவனம் முடிவு.


     சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 100 பவுன் நகையுடன் கீழே கிடந்த கைப்பையை பணியில் இருந்த ஏட்டு லாசர் எடுத்து உரியவர்களிடம் ஒப்படைத்தார்.


ஆப்கன் நிலநடுக்கம் : 100 பேர் பலி


     செயின்ட் ஹெலினா தீவில் சிறையில் இருந்தபோது நெப்போலியன் எழுதிய தப்பும் தவறுமான ஆங்கில கடிதம் ரூ.2.24 கோடிக்கு ஏலம் போனது.


     பு.புளியம்பட்டி அருகே பைன் பியூச்சர் திட்டத்தில் நிலத்தை விற்று பணம் போட்டு ஏமாந்த விவசாயிகள் கண்ணீர்.   







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக